வெள்ளி, 19 ஜூன், 2009

மாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (அழைப்பு)

மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்.
இன்ஷா அல்லாஹ்
வருகின்ற வெள்ளிக்கிழமை 26-06-2009 அன்று மாலை 7:00 மணிக்கு ..
இடம் : QITC மர்கஸ் ( நஜ்மா ஸுக்அல் கராஜ் பின் புறம் )...
ஒவ்வரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களுக்கான , பெண்கள் உரையாற்றும் இந்நிகழ்ச்சியில் குடும்பத்தார்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம் .
---------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"
அல்குரான் 3:110
-------------------------------------------------------------------------

புதன், 17 ஜூன், 2009

உம்ரா 2009


"ரமலானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும் "

என்பது நபிமொழி .

அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ் (ரலி ) நூல் : புகாரி 1782 ,1863

இன்ஷாஅல்லாஹ் ! ரமலான் இறுதி பத்தில் மார்க்க அறிஞர் வழிகாட்டுதலில் செய் முறை பயிற்சியுடன் கூடிய நபி (ஸல் ) அவர்களின் காட்டித்தந்த வழியில் உம்ரா பயணம் மேற்க்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுயிருக்கிறது.

புனித மக்காவில் பத்துநாட்கள் .......

மதீனாவில் இரண்டு நாட்கள் ......
சிறந்த தங்குமிட வசதி .....

தினமும் இஸ்லாமிய நல்லொழக்க பயிற்சி வகுப்புகள் ....

என இஸ்லாத்தை பற்றி ஆழமாக அறிந்து க்கொள்ளும் அரிய வாய்ப்புகளுடன் இப்பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. உம்ரா செல்ல எண்ணமுள்ளவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

கூடுதல் விவரங்களுக்கு உடன் தொடர்பு க்கொள்ளவும்
விண்ணப்ப படிவம்
Phone :4315863

e-mail:qitcdoha@gmail.com

-----------------------------------------------------------------------------------------

"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !" அல்குரான் 3:110

------------------------------------------------------------------------------------------

சனி, 6 ஜூன், 2009

QITC உம்ரா 2009




QITC மர்கஸில் இஸ்லாத்தை தழுவிய இரண்டு சகோதரர்கள்





மர்கஸில் நடைப்பெறும் தாவா பணிகள்கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் பிரதி வாரம் வியாழக்கிழமை இரவு 8:30 லிருந்து 10:30 மணி வரை மூன்று சிறப்பு பயான்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நபி தோழியர்கள் வரலாறு என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி முஹம்மத் அலி MISC அவர்களும் ஹதீஸ் கூறும் படிப்பினை என்ற தலைப்பில் சகோதரர் அஹமது இப்றாஹீம் அவர்களும் குர்ஆன் கூறும் வரலாறு என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி நஜ்முல் ஹ_சைன் அவர்களும் உரை நிகழ்த்துகின்றார்கள்.
இறுதி பகுதியாக வாரம் ஒரு துஆ மனனம் செய்வது என்ற அடிப்படையில் வாராவாரம் ஒரு துஆவை பிரசுரத்தை மர்கஸ் வெளியீடுகிறது.
இத் தர்பியா வகுப்பை சகோதரர் மௌலவி நஜ்முல் ஹ_சைன் அவர்கள் நடத்துகிறார்கள்.எல்லாரும் அதே நிகழ்ச்சியில் மனனம் செய்து கொள்ளவும் ஐயத்தை கேட்டு தெளிவு பெறவும் வலியுறத்தப்படுகிறது.
நிகழ்ச்சியின் இறுதியில் உரையாற்றப்பட்ட மூன்று தலைப்பபுகளிலிருந்தும் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டு மாத இறுதியில் அதிக மதிப்பெண் பெறும் சகோதர சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
தோஹாவின் மற்ற பகுதிகளில் நடைப்பெறும் தாவா பணிகள்தோஹாவில் தமிழறிந்த சகோதரர்கள் அதிகமாக வாழும் நஜ்மா ,சலாத்தா ஜதீத் இபின் மெஹ்முத் , லக்தா , வக்ரா , சனையா , கராஃபா , மைத்தர்
ஆகிய எட்டு பகுதிகளில் ஜூம்ஆ தொழுகைக்குப்பின்னர் தமிழில் பயான் நடைப்பெறுகிறது. மேலும் மாதம் ஒரு முறை முதல் வெள்ளியன்று அல்கோர் கிளை சார்பாக சிறப்பு பயானும் நடைப்பெற்று வருகின்றது.
மர்கஸில் இஸ்லாத்தை தழுவியவர்கள்
கடந்த வாரம் மர்கஸில் நடைப்பெற்ற வாராந்திர நிகழ்ச்சியின் போது கத்தரில் இன்ஜினியராக பணிபுரியும் சிதம்பரத்தை சேர்ந்த ராமகிருட்டிணன் என்ற மாற்று மத சகோதரர் இஸ்லாத்தை தழுவினார்.அச்சகோதரருக்கு மௌலவி நஜ்முல் ஹ_சைன் கலீமாவை சொல்லி கொடுத்து இஸ்லாம் கூறும் கடவுட்கொள்கை என்ன? என்பது பற்றியும் கடவுளை எப்படி நம்ப வேண்டும் ? என்பது பற்றியும் விளக்கினார்.தான் இஸ்லாத்தின் பால் தன் கல்லூரி படிக்கும் போதே ஈர்ப்புள்ளவனாகவும் மேலும் இஸ்லாத்தை பற்றி அறிய நிறைய நூல்களையும் ஆய்வு கட்டுரைகளையும் வாசித்து வந்ததாகவும் தன்னுடைய விருப்பத்தை வெளியே சொல் தகுந்த வாய்ப்பு கிடைக்காமல் இத்தனை வருடம் ஓடிவிட்டதையும் கத்தர் வந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் அல்லாஹ் என்னை இங்கே உங்கள் முன்னால் நிறுத்தி நான் இஸ்லாத்தை தழுவும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறான் என அப்துர்ரஹ்மான் என்று தனது பெயரைசூட்டிக் கொண்ட சகோதரர் கூறினார்.
அவருக்கு அடுத்ததாக இரண்டு மாதம் முன்னர் புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர் தாவூத் அவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தனது அனுபவத்தையும் கேட்கப்படும் கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களால் தான் மிகவும் மனநிறைவும் தெளிவையும் பெற்றதால் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டேன் என்றும் கூறினார்.
மர்கஸில் நடைப்பெற்ற பெண்கள் சிறப்பு பயான்கடந்த வெள்ளிக்கிழமை 29-05-2009 இரவு 8:00 மணிக்கு மர்கஸில் பெண்களுக்காக மட்டும் பெண்களால் நடத்தப்படும் சிறப்பு பயான் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் நற்பண்புகள் என்ற தலைப்பில் சகோதரி ரஹனா சுல்தானாவும் பெண்கள் தவிர்க்கப்படவேண்டிய ஒப்பணைகள் என்ற தலைப்பில் சகோதரி நிஸா அவர்களும் உரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் கத்தர் வாழ் தமிழறந்த சகோதரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.