சனி, 11 செப்டம்பர், 2010

கத்தரில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்




கத்தரில் அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் ஈத் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது .அல் மால் எதிரில் உள்ள அலி பின் அல் முசல்மானி பள்ளியில் ஈத் பெருநாள் தொழுகை மற்றும் அரபியில் குத்பா உரைக்கு பின்னர் மௌலவி அப்துல் கரீம் MISc (பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்) அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் தலைமை வகித்தார்கள் . மூத்த தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்கள். மையத்தின் செயலாளர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

கத்தர் வாழ் ஐநூறுக்கும் மேற்பட்ட சகோதர சகோதிரிகள் ஈகை திருநாள் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஒருவர்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.


"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!" - அல்குரான் 3:110

திங்கள், 6 செப்டம்பர், 2010

ஈத் பெருநாள் சகோதர சங்கமம்



அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
அன்பிற்குரிய கத்தர் வாழ் முஸ்லிம் சகோதர சகோதரிகளே !
இன்ஷா அல்லாஹ் , ஈத் பெருநாள் அன்று
" ஓர் சகோதர சங்கமம்" .
பெருநாள் தொழுகை மற்றும் குத்பா உரைக்கு பின்னர் , தமிழில் சிறப்பு சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இடம் : அலி பின் அலி முஸ்ஸல்மாணி மஸ்ஜித்
( மால் ரௌண்டஅபௌட் எதிரில், அல் அஹ்லி ஸ்போர்ட்ஸ் கிளப் அருகில் )
உரை : சகோதரர் அப்துல் கரீம் MISC
தமிழறிந்த இந்திய இலங்கை சகோதர சகோதரிகள் தாங்களும் தங்கள் உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் ஈத் பெருநாள் கொண்டாட்டத்தை சிறப்புடன் கொண்டாட வாரீர் வாரீர் என அன்புடன் அழைக்கிறோம்.
-----------------------------------------------------------------------
"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!" அல்குரான் 3:110

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

QITC இஃப்தார் 2010



கத்தரில் சென்ற வெள்ளிக்கிழமை 03-09-2010 அன்று மாபெரும் இப்தார் விருந்து மற்றும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது . அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் ஆறாவது ஆண்டாக இவ்வருட ரமலானில் மாபெரும் இப்தார் விருந்தை நடத்தியது . இந்நிகழ்ச்சி பின் மெஹ்மூத் பகுதியில் அமைந்துள்ள ,ஹம்ஜா பின் அப்துல் முத்தலிப் பள்ளிக் கூட உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது . மாலை 5:00 மணிக்கு ,சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்களின் துவக்க உரையுடன் , சகோதரர் அப்துல் கரீம் MISC அவர்கள் " குர் ஆன் கூறும் அறிவியல் உண்மைகள் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் , ரமலானில் மையத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து கூறினார். தமிழறிந்த சகோதரர்கள் ஆர்வத்துடன் இஸ்லாத்தையும் அதன் போதனைகளையும் அறிய முற்படவேண்டும் எனவும் மர்கசில் நடைபெறும் வாரந்திர மாதாந்திர பயான்களுக்கு வருகை தரவேண்டும் எனவும் கூறினார் . பின்னர் வருகை தந்த அனைவருக்கும் இப்தார் பதார்த்தங்கள் , நோன்பு கஞ்சி பரிமாறப்பட்டது . நோன்பு திறந்தவுடன் மக்ரிப் தொழுகை நிறைவேற்றபட்டது . பின்னர் அனைவர்க்கும் சுட சுட உணவு விருந்தளிக்கப்பட்டது . அரங்க ஏற்பாடுகள் துணை செயலாளர் சகோதரர் அப்துல் கபூர் அவர்களின் தலைமையில் சகோதர் கலீல் கிப்ரான் , சகோதர் பக்ரு , சகோதர் பாஷா ஆகியோர் அடங்கிய குழு சிறப்புடன் அமைத்திருந்தது . உணவு ஏற்பாடுகளை துணை செயலாளர் ஹாஜி முஹம்மது அவர்கள் தலைமையில் , சகோதரர் அபுதாகிர் , சகோதரர் ஜாபர் ,சகோதரர் அப்துல் ஜலீல் ஆகியோர் அடங்கிய குழு சிறப்புடன் செய்தது. சகோதரர் அஜ்மீர் அலி ,சகோதரர் அப்துல் காதர் அடங்கிய விளம்பர குழு , பல் வேறு தொழிலாளர் கேம்ப்களில் நிகழ்ச்சி பற்றி விளம்பரங்களை கொண்டு சேர்த்து அழைப்பு விடுத்தனர். தோஹாவின் பல் வேறு பகுதிகளிலிருந்தும் எண்ணூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் , பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைந்தார்கள். அல் ஹம்துலில்லாஹ் !



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"அல்குரான் 3:110

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

சிறப்பு மார்க்க சொற்பொழிவு மற்றும் மாபெரும் இப்தார் விருந்து நிகழ்ச்சி.

அன்பான நினைவூட்டல் !




அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் சகோதரிகளே !
இன்று மாலை 03-09-2010 , இன்ஷா அல்லாஹ் கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்தும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு மற்றும் மாபெரும் இப்தார் விருந்து நிகழ்ச்சி.
நேரம் : மாலை 5:00 மணிக்கு
இடம் : ஹம்சா பின் அப்துல் முத்தலீப் ஆண்கள் பள்ளி கூட உள்ளரங்கம் (பின் மஹ்மூத் )
( சென்டர் ரவுண்டு அபௌட் வழியாக பின் மெஹ்மூத் செல்லும் வழி )
உரை : அல்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தனி இடவசதியுண்டு.
இந்நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துகொண்டு பயனடைந்து ஈருலகிலும் வெற்றியாளர்களாக திகழ்வோமாக!
________________________________________
உங்களுக்கு தேவையான திரு குரான் தமிழ் மொழியாக்கம் , தவ்ஹீத் நூல்கள், ஏராளமான தலைப்பிலான மார்க்க சொற்பொழிவு குறுந்தகடுகள் , ஹதீத் கிரந்தங்கள் ஆகிய அனைத்தும் பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்வீர் : தொலைபேசி : 44315863, e-mail :qitcdoha@gmail.com. மர்கஸ் முகவரி : வில்லா எண் : 12, சூக் கராஜ் பின் புறம் ,நஜ்மா போஸ்ட் ஆபீஸ் அருகில் , கார்டன் ரெஸ்டாரண்ட் பின் புற சாலை . நஜ்மா ,தோஹா கத்தர் .



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!" அல்குரான் 3:110

வியாழன், 2 செப்டம்பர், 2010

QITC அல்கோர் சகர் நேர சிறப்பு நிகழ்ச்சி 26-08-2010


கடந்த 26-08-2010 வியாழக்கிழமை இரவு QITC யின் அல்கோர் கிளை , சகர் நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தியது. இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு அல்கோர் கிளை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் தேவியாக்குறிச்சி ஜியாவுதீன் அவர்கள் தலைமை வகித்தார்கள் . நிகழ்ச்சியின் துவக்க உரையாக சகோதர் மௌலவி லாயிக் அவர்கள் "கொடை கொடுப்போம் விடை கொடுப்போம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் "அன்சாரிகளின் அழகிய வரலாறு " என்ற தலைப்பில் உரையாற்றினார் . மூன்றாவது உரையாக "நபிகளாரின் இறுதி எச்சரிக்கை " என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள் . இறுதியாக தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர் சகோதரர் அப்துல் கரீம் MISC அவர்கள் "பத்ரு போர் தரும் படிப்பினை " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் சகர் உணவு பரிமாறப்பட்டது . முன்னூறுக்கும் மேற்பட்ட அல்கோர் வாழ் சகோதரர் சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர் . இரவு பத்து மணிக்கு தொடங்கிய இச்சிறப்பு நிகழ்ச்சி சஹர் நேரம் இரண்டுமணி வரை உற்சாகத்துடன் நடைபெற்றது . இறுதியாக பொருளாளர் செய்யத் இப்ராஹீம் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ் !

"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"அல்குரான் 3:110

புதன், 1 செப்டம்பர், 2010

QITC UMRA 2010



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"அல்குரான் 3:110

சனி, 28 ஆகஸ்ட், 2010

இன்ஷா அல்லா வருகின்ற வெள்ளிக்கிழமை 03-09-2010 மாபெரும் இப்தார் விருந்து

"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!" அல்குரான் 3:110

புதன், 25 ஆகஸ்ட், 2010

Tanzil : Quran Navigator

அல்கோரில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)
அன்பிற்கினிய சகோதர சகோதிரிகளே !
இன்ஷா அல்லாஹ் வருகின்ற வியாழக்கிழமை இரவு அல்கோர் சிறப்பு ஸஹர் நேர நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
தேதி : 26-08-2010
இடம் : அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் விளையாட்டு அரங்கம்
நேரம் : இரவு பத்து மணிமுதல் - இரண்டு மணிவரை
வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.
ஸஹர் நேர உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
அனைவரும் நண்பர்களுடனும்  குடும்பத்துடனும்   வாரீர் !
  

"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!" அல்குரான் 3:110

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

மாபெரும் இப்தார் நிகழ்ச்சி

சனி, 21 ஆகஸ்ட், 2010

ரமலான் சகர் நேர சிறப்பு சொற்பொழிவுகள்






 ரமலான் சகர் நேர சிறப்பு சொற்பொழிவுகள் 
19-08-2010  அன்று அல்லாஹுவினுடைய பெருங்கிருபையால்  கத்தரில் ரமலான் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது . கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்மதீனா கலிபாவில் அமைந்துள்ள சவுதி மர்கஸில் சிறப்பு சஹர் நேர நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்ததது . தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள , தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமத்தின் மேலாண்மை குழு உறுப்பினர்  சகோதரர் ஷம்சுல்லுஹா  ரஹ்மானி அவர்களும் , இர்ஷாத் கல்லூரி பேராசிரியர் சகோதரர் அப்துல் கரீம்  MISC  அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்இந்நிகழ்ச்சிக்கு சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் தலைமை ஏற்று    நடத்தினார்கள் . முன்னதாக சவுதி மார்க்சின் இஸ்லாமிய  அழைப்பாளர் சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் " ரமலான் எனும் அருட்கொடை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . பின்னர் சகோதரர் அப்துல் கரீம்  MISC  அவர்கள் " ரமலானில் பெற வேண்டிய படிப்பினைகள் " என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். நள்ளிரவு தாண்டி நடைபெற்று கொண்டிருக்கும் இந்த தொடர் சொற்பொழிவுகளில் கேட்பவர்களுக்கு உற்சாகத்தை அளிக்க தேநீர் , பரிமாறப்பட்டது . இதனிடையில் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் நடைபெற்ற இஸ்லாமிய அடிப்படை கொள்கை விளக்க வகுப்பில் சிறப்பாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டதுஇறுதியாக சிறப்பு விருந்தினர் சகோதரர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் " அஞ்சுவோம் அடிபணிவோம் " என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள் . அல்லாஹுவிற்காக தொழுது, நோன்பு வைத்து ,இன்னபிற நல்லறங்களை செய்து  கொண்டுவந்தாலும்  திருமணத்தின் போது மார்க்கம் கட்டி தராத அனாச்சரங்களிலிருந்து இன்னும் விடுவித்து கொள்ளாமல் இருக்கிறது நம் தமிழக இஸ்லாமிய சமுதாயம். சொந்தங்கள் எதிர்த்தாலும் வரதட்சனை வாங்க மாட்டோம் , பெண் வீட்டார் அளிக்கும் விருந்தில் கலந்துக்கொள்ள மாட்டோம் என்று உறுதியோடு நிற்கும்  இளைஞர் பட்டாளத்தை உருவக்கியிருகிறது நம் ஜமாஅத்.தொழுகையும் கொள்கையும் இல்லாதவன்  சொர்கத்தில்  புகமுடியாது. தீமையை புறக்கணித்தால் தான் தீமை அழியும் , ஏகத்துவ கொள்கையில் உறுதி ஏற்படும் ,அதன் வாயிலகத்தான் சொர்க்கம் சொல்ல இயலும் .சமுதாயத்தின் தீமைகளை ஒழித்து , நம்முடைய ஈமானை காத்து, நபி (ஸல் ) காட்டிய முன் மாதிரி சமுதாயத்தை உருவாக்க அயராது பாடுபடுவோமாக என்று தனது உரையில் கூறினார் . மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் ரமலானில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் பற்றி அறிவிப்பு செய்தார் . இறுதியில்  பொருளாளர் சகோதரர் சயீத் இப்ராஹீம் அவர்கள் நன்றியுரை யாற்றினார் . இதில் ஐநூறுக்கும்  மேற்பட்ட சகோதரர் சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்ததார்கள் . வருகை தந்த அனைவருக்கும் சகர்   நேர உணவு பரிமாறப்பட்டது . துணை செயலாளர் சகோதரர் ஹாஜி அவர்களின் தலைமையில் உணவு குழு உணவு ஏற்பாட்டை  சிறப்பாக செய்திருந்தததுஅரங்க அமைப்பு குழு தலைவர் சகோதரர் அப்துல் கபூர் அவர்களின் தலைமையில் அரங்க ஏற்பாடு மற்றும்   ஒளி ஒலி ஏற்பாட்டை சிறப்புடன் செய்திருந்தது. அல்லாஹுவின் பெருங்கிருபையால் நிகழ்ச்சி சிறப்புடன் நடந்து முடிந்தது



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!" அல்குரான் 3:110

வக்ராவில் கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய ஸஹர் நேர சிறப்பு இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி

இடம்: வக்ரா விளையாட்டு உள் அரங்கம்

நாள்: 12-08-2010 வியாழன் இரவு 10 மணி முதல் ஸஹர் நேரம் வரை இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

சரியாக இரவு 10 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சியில் பேச்சு பயிற்ச்சியில் பயிற்ச்சி பெற்ற சகோதரர்கள் மற்றும் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு பேச்சு பயிற்ச்சி எடுத்துக்கொண்டவரும் சிறிய உரையாற்றினார்கள்.

குழந்தைகளுக்கான மார்க்க அறிவுப் போட்டிகளும் மணணம் போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றது.

இறுதியில் சிறுமி சுமையா என்பவர் இனைவைத்தல் என்ற தலைப்பில் ஒரு சிற்றுரையும் ஆற்றினார்.

மேலும் தொடர்ந்து மெளலவி லாயிக் அலி அவர்கள் ரமளானும் அதன் சிறப்புக்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மேலும் அதனைத் தொடர்ந்து மெளலவி அன்ஸார் அவர்கள் நோன்பு ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் நோன்பின் சட்டங்களை மிகச் சிறப்பாக தனது உரையிலே விளக்கி உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மெளலவி அப்துல்ஸமது மதனி அவர்கள் ரமளான் ஓர் பயிற்ச்சிக் களம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

அதன் பிறகு குழந்தைகளின் மார்க்க அறிவுப் போட்டிகளில் பங்கெடுத்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

வக்ராவில் முதன் முதலாக நடைபெற்ற இதுபோன்ற நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் ஸஹர் உணவு ஏற்ப்பாடு செய்யப்பட்டு வருகை தந்த அனைத்து சகோதர சகோதரிகளும் ஸஹர் உணவு அருந்தி அல்லாஹ்வின் அருளால் இந்நிகழ்ச்சி இனிதாக நிறைவடைந்தது.


"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"அல்குரான் 3:110

வெள்ளி, 25 ஜூன், 2010

அகீதாவகுப்பில் முதல்ஆறு இடத்தில்தேறியவர்களுக்கு பரிசளிப்புவிழா



بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......


24-06-2010 அன்று வியாழக்கிழமை இரவு , கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் அகீதா வகுப்பில் முதல் ஆறு இடத்தில் தேறியவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது .
பரிசளிப்பு விழாவிற்கு , இஸ்லாமிய அழைப்பு மையமான சவுதி மார்கஸ் என்று அழைக்கப்படும் தாவா வல் இர்ஷாத் ன் தலைவர் சகோதரர் ஷேக் பாவாஜ் அல் காமிதி அவர்களும் , கத்தர் கெஸ்ட் சென்டர் தாளாளர் சகோதரர் ஷேக் அல் மௌலா அவர்களும் வெளிநாட்டினர்க்கான அழைப்பு மையம் பானர் என்ற அமைப்பின் , தாவா ஒருங்கிணைப்பாளர் சகோதரர் டாக்டர் அலி இத்ரீஸ் அவர்களும் , நமது மையத்தின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்து தந்தனர்.
அகீதா வகுப்பில் 90% மதிப்பெண்கள் பெற்ற முதல் ஆறு சகோதர சகோதரிகளுக்கு , கை கடிகாரமும் , நற் சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் அகீதா வகுப்பில் கலந்து கொண்ட 62 சகோதர சகோதிரிகளுக்கு , நற் சான்றிதழ் வழங்கப்பட்டது. இது போன்று பல் வேறு தாவாப்பணிகளை வருங்காலத்தில் தவ்ஹீத் மர்கஸ் சிறப்புற நடத்திட வேண்டும் என்று வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் கூறினார்கள். அல்லாஹுவுடைய மாபெரும் கிருபையால் இக்கூட்டம் சிறப்புற நடந்தேறியது. அல்ஹம்துளில்லாஹ் !


"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"அல்குரான் 3:110

அகீதா வகுப்பில் முதல் ஆறு இடத்தில் தேறியவர்களுக்கு பரிசளிப்பு விழா

 

அகீதா வகுப்பில் முதல் ஆறு இடத்தில் தேறியவர்களுக்கு பரிசளிப்பு விழா

"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"அல்குரான் 3:110
Posted by Picasa

செவ்வாய், 22 ஜூன், 2010

தமிழகத்தை சேர்ந்த மாற்று மத சகோதரர் சந்தானம் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார்


10-06-10 அன்று வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் வாரந்திர சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது . இந்நிகழ்ச்சியின் போது , தமிழகத்தை சேர்ந்த மாற்று மத சகோதரர் சந்தானம் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் .

அவருக்கு சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் கலிமா சொல்லிக்கொடுத்தார் . அப்துல்லாஹ்( இறைவனின் அடிமை ) என்ற பெயரே தான் விரும்புவதாகவும் , அதையே தான் சூட்டி கொள்வதாகவும் கூறினார் .

கத்தருக்கு வந்து இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டதாகவும் , தன்னுடன் பணிபுரியும் சக முஸ்லிம்கள் தொழுவதற்காக பள்ளிக்கு செல்லும் போது தான் மட்டும் தனித்து இருந்த நிலையில் , இஸ்லாமிய கடவுட் கொள்கையை பற்றி ஆழமாக அறிந்துக்கொள்ள விரும்பிய போது இஸ்லாமிய சகோதரர்கள் அளித்த பல் வேறு இஸ்லாமிய நூல்கள் தான் தனக்கு இஸ்லாத்தின் பால் ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று கூறினார் .

தான் இஸ்லாத்தை படித்து அறிந்து கொண்டது முதல் ,ஒரு கடவுள் தான் இருக்க முடியும் , மேலும் அந்த கடவுள் தான் இவ்வுலகை படைத்தான், இணை துணை இல்லாத அக்கடவுளை மட்டும் வணங்க வேண்டும் என்ற நம்பிக்கையை ஆழமாக தன்னுள்ளத்தில் ஏற்படுத்திக்கொண்டதாகவும் , இம்மார்க்கத்தை எடுத்துரைத்த அல்லாஹுவின் தூதர் முஹம்மது (ஸல் ) அவர்கள் தான் இறுதி தூதர் என்று நம்புவதாகவும் கூறினார்.

இஸ்லாத்தை தான் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள வந்த அனுபவத்தை சொல்லும்போது ,ஒரு இஸ்லாமிய பேச்சாளர்க்குண்டான பாணியில் விளக்கியது ,அரங்கத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது . பின்னர் QITC யின் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் , திரு குர்ஆன் தமிழாக்கத்தையும் , தொழுகை பயிற்சி நூலையும் வழங்கினார் . மூத்ததலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் .ஆவணங்களில் பெயர் மாற்றம் மற்றும் தேவையான உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் , கத்தர் இந்திய மையம் வழங்கும் என்று சகோதரர் மஸ்ஊத் அவர்கள் தெரிவித்தார்கள் .


அல்ஹம்துலில்லாஹ் !



நேர் வழி பெற்றோர்க்கு அவன் ( அல்லாஹ்) நேர் வழியை அதிகமாக்கி ,அவர்களுக்கு (தன்னைப்பற்றி அச்சத்தையும் )

வழங்கினான் . (திரு குர்ஆன் : சூரா முஹம்மது 47:17 )