சனி, 29 செப்டம்பர், 2012

28-09-2012 கத்தர் மண்டல "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி"

அல்லாஹுவின் அருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலம் சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் , பெண்களுக்கு பெண்களே நடத்தும் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி", மண்டல [QITC] மர்கசில் 28-10-2012 வெள்ளி அன்று மாலை 7:௦௦00 முதல் 8:00 மணி வரை சகோதரி. கதீஜத்துல் நூரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, சகோதரி. ஃபாரிஸா அவர்கள் "சிறிய செயல்கள் - பெரிய நன்மைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு,சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "சிறந்த சமுதாயம்" என்ற தொடர் தலைப்பில் "குடும்பத்தில் பெண்களுக்குரிய பொறுப்புகள்" பற்றி உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.



28-09-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 28-09-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !
  1. வக்ரா பகுதியில்- சகோதரர்.அஹ்மத் ஃபைசல் அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் உரையாற்றினார்கள். 
  3. அல் அத்தியா பகுதியில் – மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் – மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. லக்தா பகுதியில் - சகோதரர்.முஹம்மத் யூசுஃப்அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. அபூஹமூர் பகுதியில் – டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



27-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால், 

கத்தர் மண்டல மர்கஸில் [QITC ] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 27-09-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை பொருளாளர் சகோதரர். முஹம்மத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள், "நற்குணத்தின் நாயகர்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "நாயனை நினைவில் நிறுத்துவோம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய,தொடர்ந்து செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் சென்ற வார பயான் கேள்விகளுக்கான விடைகளும்,இந்த வார பயானில் இருந்து மூன்று கேள்விகளும் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

இதே நேரம், மௌலவி,முஹம்மத் தமீம் ,M.I.Sc., அவர்கள் குழந்தைகளுக்கான 'தர்பியா வகுப்பை' நடத்தினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.







புதன், 26 செப்டம்பர், 2012

28-09-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - அழைப்பு

بسم الله الرحمن الرحيم
அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

மாதாந்திர பெண்கள்

சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
அழைப்பிதழ்

நாள்: 28/09/2012 வெள்ளி மாலை 7:௦௦ மணி
இடம்: QITC மர்கஸ்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !

QITC 
மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்.

அதேபோல் இன்ஷா அல்லாஹ்வரும் வாரம் 28/09/2012 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி உள்ளது. குடும்பத்துடன் வசிக்கும் அனைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கூடுதல் தகவலுக்கு:
சகோமுஹம்மத் இல்யாஸ், +974 – 5518 7260
(பொருளாளர் பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சிறந்த துஆக்கள்

அளவற்ற அருளாளன் நிகரில்லா அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்…

பாவமன்னிப்புத்தேட தலையாய துஆ
(ஸய்யிதுல் இஸ்திக்ஃபார்)

اَللّهُمَّ أَنْتَ رَبِّيْ ، لاَ إِلهَ إِلاَّ أّنْتَ ، خَلَقْتَنِيْ ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرَّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وأَبُوْءُ بِذَنْبِيْ فاَغْفِرْ لِيْ إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ 

(அல்லாஹும்ம அன்த்த ரப்பீ, லாயிலாஹ இல்லா அன்த்த, கலக்தனீ, வ அன அப்துக, வஅன அலா அஹ்திக, வ வஃதிக, மஸ்த தஃது, அஊது பிக மின் ஷர்ரி மா சனஃது, அபூஉ லக பி னிஃமதிக அலைய்ய, வ அபூவு பி ஸன்பீ, ஃபக்பிர்லீ, இன்னஹு லா யக்பிருஸ் ஸுனூப இல்லா அன்த்த.)

பொருள்:

யா அல்லாஹ்! நீயே என் இரட்சகன்! உன்னைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு (எவரும், எதுவும்) இல்லை. நீயே என்னைப் படைத்தாய்! நான் உன் அடிமை! நான் என்னால் முடிந்த அளவு உன்னிடம் செய்துள்ள உடன்படிக்கையிலும், உனக்கு செய்துள்ள வாக்களிப்பிலும் இருக்கிறேன். நான் செய்துவிட்ட ஒன்றின் தீங்கைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். என் மீது நீ செய்திருக்கிற உன்னுடைய பாக்கியங்களை நான் ஏற்கிறேன். என்னுடைய பாவத்தையும் நான் ஏற்கிறேன். பாவங்களை மன்னிக்கிறவன் உன்னைத்தவிர வேறு எவரும் இல்லை.

இதன் சிறப்பு:

எவர் இதை முழு நம்பிக்கைக் கொண்டவராக பகலில் கூறிவிட்டு, மாலைப் பொழுதை அடைவதற்கு முன்னர் இறப்பெய்து விடுகிறாரோ அவர் சுவர்க்கத்திற்குரியவர். எவர் முழுநம்பிக்கைக் கொண்டநிலையில் இரவில் ஓதி, பகல் பொழுதை அடைவதற்கு முன்னர் இறப்பெய்து விடுகிறாரோ அவர் சுவர்க்கத்திற்குரியவர் என நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பு: ஷத்தாது பின் அவ்ஸ் (ரளி), நூல்: புகாரீ 6306)

துக்கமும், கவலையும் நீங்க ஓதவேண்டிய துஆ

اَللّهُمَّ إِنِّيْ عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ ناَصِيَتِيْ فِي يَدِكَ ماضٍ فِيَّ حُكْمُكَ عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوْ اِسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ ربِيْعَ قَلْبِيْ وَنُوْرَ صَدْرِيْ وَجَلاَءَ حُزْنِيْ وَذِهَابَ هَمِّيْ وَغَمِّيْ

(அல்லாஹும்ம இன்னீ அப்துக, வப்னு அப்திக, வப்னு அமதிக, நாசியதீ ஃபீ யதிக, மாளின் ஃபிய்ய ஹுக்முக, அத்லுன் ஃபிய்ய களாஉக, அஸ்அலுக பி குல்லி இஸ்மின் ஹுவ லக, ஸம்மைத்த பிஹி நஃப்ஸக, அவ் அன்ஜல்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதன் மின் கல்கிக, அவ் இஸ்தஃதர்த்த பிஹி ஃபீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆன ரபீஅ கல்பீ, வ நூர சத்ரீ, வ ஜலாஅ ஹுஸ்னீ, வ ஸிஹாப ஹம்மீ, வ கம்மீ.)

பொருள்:

யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன் அடிமையாவேன். உன் அடிமை ஒருவரின் மகனுமாவேன். உன் அடியாளி ஒருத்தியின் மகனுமாவேன். என்னுடைய முன் நெற்றி உன் கையிலாகும். உனது தீர்ப்பு என்னில் செல்லுபடியாகும். என்னிலே உனது ஏற்பாடும் நீதமாகும். எவைகளை நீ உனக்காக பெயராக வைத்துக் கொண்டாயோ அல்லது உன்னுடைய வேதத்தில் எதை இறக்கிவைத்துள்ளாயோ அல்லது உன்னுடைய படைப்புகளில் எவருக்கு அதைக்கற்றுக் கொடுத்துள்ளாயோ அல்லது உன்னிடமுள்ள மறைவான ஞானத்தில் எதை உனக்காக பிரத்தியேகமாக தேர்வு செய்து வைத்துக் கொண்டுள்ளாயோ அத்தகைய ஒவ்வொரு பெயரையும் முன்வைத்துக் கேட்கிறேன். குர்ஆனை என் இதயத்திற்கு வசந்தமாகவும், என் நெஞ்சிற்கு ஒளியாகவும், என் கவலைக்கு மருந்தாகவும், என் துக்கத்தையும், கவலையையும் போக்கிவிடும் ஒன்றாகவும் ஆக்கி அருள் புரிவாயாக!

இதன் சிறப்பு:

துக்கமோ, மனக்கவலையோ ஏற்பட்ட ஒருவர் இதைக் கூறி பிரார்த்தனை புரிந்தால், அல்லாஹ் அவருடைய கவலையை போக்கியும், அவருடைய கவலையை மகிழ்ச்சியாக மாற்றியும் தருவான் என நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இவ்வார்த்தைகளை நாங்கள் கற்றுக்கொள்வது அவசியமா? என நபித்தோழர்கள் வினவினர். அதற்கு ஆம்! அவற்றை செவியேற்றவர் அவற்றை கற்றுக்கொள்வது அவசியம் எனக் கூறினார்கள். 
(அறிவிப்பு: இப்னு மஸ்ஊத் (ரளி), நூல்: ஸஹீஹ் அத்தர்கீப் 1822) 

மனனம் செய்வோம் வாருங்கள்! இறைவனின் அருட்கொடைகளை அடைந்திட விரைவோம் வாருங்கள்!

தொகுப்பு: மௌலவி. அப்துஸ்ஸமத் மதனீ




21-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC], 21-09-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" பதிநான்காவது வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் ஏற்கனவே நடத்திய பாடங்களை "ரிவிசன்" முறையில் நடத்தினார்கள்.

இதில், இந்திய- இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் இம்மர்கஸில் மஃக்ரிப் தொழுகையை தொடர்ந்து நடைபெறும்.



21-09-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 21-09-2012 கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 21-09-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !
  1. வக்ரா பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள். 
  3. அல் அத்தியா பகுதியில் – மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் – மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர்.ஜலாலுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. லக்தா பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. கராஃபா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. மதினா கலிபா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள். 
  9. பின் மஹ்மூத் பகுதியில் - டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  12. கர்வா கேம்பில்- மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.
  13. டொயோட்டா கேம்பில் - மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.
  14. அபூஹமூர் பகுதியில் – மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



20-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 20-09-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணை பொருளாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் "பாதிக்கப்பட்ட முஸ்லிம் நடந்து கொள்ளும் முறைகள்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் தமீம், M.I.Sc., அவர்கள், "இஸ்லாத்தின் பார்வையில் இன்சிரிப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "நாயனை நினைவில் நிறுத்துவோம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய, தொடர்ந்து செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ, M.I.Sc., அவர்கள் சென்ற வார பயான் கேள்விக்கான விடைகளும், இந்த வார பயானில் இருந்து மூன்று கேள்விகளும் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

இதே நேரம், மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் அவர்கள் குழந்தைகளுக்கான, 'தர்பியா வகுப்பை', தர்பியா அறையில் வைத்து நடத்தினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.




சனி, 15 செப்டம்பர், 2012

Hundreds march in peaceful Doha rally - 14/09/12

Hundreds of people marched in a peaceful rally from the Omar bin Khattab mosque to the American embassy in Doha yesterday afternoon soon after the Friday prayer to protest against a film denigrating the Prophet of Islam.

Expressing their resentment over the attempt to malign Islam by tarnishing the image of the Prophet, the protesters called for revenge against those who made the movie.

“No Muslim will tolerate such a cowardly and lewd form of depicting the Prophet’s personal life. It is unfortunate that America and Europe have become the breeding ground for hatred against Islam and Islamic values and Islamic way of life” said one of the protesters, Abdullah al-Mutawwa.

Source: Gulf Times


14-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC] ,14-09-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" பதிநான்காவது வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் ஆரம்பத்தில் நடத்திய பாடங்களை "ரிவிசன்" முறையில் நடத்தினார்கள்.

இதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும், இம்மர்கஸில் ,மஃக்ரிப் தொழுகையை தொடர்ந்து நடைபெறும்.


14-09-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 14-09-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !
  1. வக்ரா பகுதியில்- மௌலவி,முஹம்மத் தமீம்,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள். 
  3. அல் அத்தியா பகுதியில் – மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் – மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர்.ஜலாலுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. லக்தா பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. கராஃபா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ, M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. மதினா கலிபா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ, M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள். 
  9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  12. கர்வா கேம்பில்- மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  13. டொயோட்டா கேம்பில் - மௌலவி, தமீம்,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



13-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால், 
கத்தர் மண்டல மர்கஸில் [QITC ] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 13-09-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை பொருளாளர் சகோதரர்.முஹம்மத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் "பாதிக்கப்பட்ட முஸ்லிம் நடந்து கொள்ளும் முறைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள், "கை நழுவும் வாய்ப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "நாயனை நினைவில் நிறுத்துவோம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய,தொடர்ந்து செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் இந்த வார பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

இதே நேரம், மௌலவி,லாயிக் அவர்கள் குழந்தைகளுக்கான,'தர்பியா வகுப்பை', தர்பியா அறையில் வைத்து நடத்தினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.





வியாழன், 13 செப்டம்பர், 2012

"அமல்களின் முக்கியத்துவம்!" பயான் வீடியோ - மௌலவி, எம்.எம். சைபுல்லாஹ் MISc

இறைவனின் திருப்பெயரால்...

19/08/2012 அன்று தோஹா ஃபனார் (FANAR) உள்ளரங்கத்தில் நடைபெற்ற QITC-யின் "ஈதுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு" நிகழ்ச்சியில், மௌலவி, எம்.எம். சைபுல்லாஹ் MISc அவர்கள் "அமல்களின் முக்கியத்துவம்!" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"அமல்களின் முக்கியத்துவம்!"


ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

07-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC], ரமதான் இடைவேளைக்குப் பிறகு, 07-09-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" பதிமூன்றாவது வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் "வினைச்சொற்களின்" பல்வேறு வடிவங்களைக் குறித்து விரிவாக பாடம் நடத்தினார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும், இம்மர்கஸில் மஃக்ரிப் தொழுகையை தொடர்ந்து,நடைபெறும்.