நபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி

திங்கள், 4 மார்ச், 2013

28-02-2013 கத்தர் மண்டலம் அல்-நஜாஹ் கிளையில் 'இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்'

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 28-02-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , 'இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில்,மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் நமது சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு குர்'ஆன் -ஹதீஸ் அடிப்படையில் விளக்கமாக பதிலளித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.