ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

கத்தர் மண்டல மர்கஸில் "த'அவாக்குழு கூட்டம்" 26-04-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில் [QITC], "த'அவாக்குழு கூட்டம்", 26-04-2013 வெள்ளி மாலை 7:15 மணி முதல் இரவு 9:30 மணி வரை மண்டல செயலாளர் மௌலவி முஹம்மத் அலீ M.I.Sc. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தை தாவா குழு ஒருங்கினைப்பாளர் சகோதரர் மௌலவி அன்சார் அவர்கள் நடத்தினார்கள்.

இக்கூட்டத்தில் துவக்கமாக மே 2013 மாத வியாழன் & வெள்ளி பயான் பட்டியல் மற்றும் சிறார்கள் தர்பியா பட்டியல் வெளியிடப்பட்டது.

பின்பு, பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடத்துதல், மாற்று மத தாவா, ஜனாஸா தொழுகை பயிற்சி வகுப்பு நடத்துதல், மற்றும் செயல் முறை பயிற்சி ஆகிய முறையில் தாவா வை செய்தல் போன்ற பல விஷயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.