சனி, 8 ஜூன், 2013

சிறார்களுக்கு நடைபெற்ற இஸ்லாமிய அடிப்படை கல்வி இறுதி தேர்வு 07-06-2013


அல்லாஹ்வின் பேரருளால், 07-06-2013 அன்று மாலை 5:30 மணிக்கு, கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் கடந்த ஆறு மாதம் காலமாக நடத்தப்பட்ட சிறார்களுக்கான இஸ்லாமிய அடிப்படை கல்விக்கான இறுதி தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வு, சிறார்களின் வயதுக்கு ஏற்ப நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டு தனித்தனி கேள்வித்தாள் தயாரித்து கொடுக்கப்பட்டது. இத்தேர்வில் 28 சிறுவர்களும் சிறுமியர்களும் கலந்து கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுதினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தேர்வு கண்காணிப்பாளர்களாக மவ்லவி முஹம்மது தமீம், மவ்லவி லாயிக் அவர்களும், அவை பொறுப்பாளர்களாக மவ்லவி இஸ்சத்தின் ரிள்வான், மவ்லவி மனாஸ், மவ்லவி அப்துஸ் சமத் மதனீ ஆகியோர் செயல்பட்டார்கள் .

சிறுவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை கல்வி - முதலாம் பாடத்திட்டம் கத்தர் மண்டல அழைப்பாளர் மவ்லவி முஹம்மது தமீம் அவர்களின் தலைமையில், மவ்லவி லாயிக், மவ்லவி இஸ்சத்தின் ரிள்வான், மவ்லவி அன்சார், மவ்லவி முஹம்மது அலி மற்றும் சகோதரர் பைசல், மவ்லவி அப்துஸ் சமத் மதனீ ஆகியோர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்டது.

இது போன்று இன்ஷா அல்லாஹ், இஸ்லாமிய அடிப்படை கல்வி - இரண்டாம் பாடத்திட்டம் உருவாக்கும் முயற்சியில் வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. அது வெற்றியடைய துஆச் செய்வோமாக!