திங்கள், 12 ஆகஸ்ட், 2013

QITC நடத்திய ஈதுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 08/08/2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று 08 /08 /2013 வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய "ஈதுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" FANAR உள்ளரங்கில் காலை 7:00 மணி முதல் 8:30 மணிவரை மண்டல அழைப்பாளர் சகோதரர். மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் தலைமையில்நடைபெற்றது.

துவக்கமாக சகோதரர். தஸ்தகீர் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்கள் ,பின்னர் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். கே. அப்துன் நாஸர் Misc அவர்கள் "ரமலான் ஏற்படுத்திய மாற்றம்!" என்ற தலைப்பில் அல்லாஹ்வை சஹாபாக்கள் எப்படி பயந்தார்கள் நாம் எப்படி பயப்படுகிறோம் என்ற இறையச்ச மிக்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அதில் பெற்றோர்களை பேணுவதின் முக்கியத்துவம், இறைவனை வணங்குவதின் முக்கியத்துவம் என்று பலதுணுக்குகளை கூறி பேசியது மக்களின் மனங்களை நெகிழவைக்கும் வண்ணம் அமைந்தது.

பின்னர் மண்டல செயலாளர் எம்.முஹம்மத் அலி MISc அவர்கள் மர்க்சின் வாரந்திர நிகழ்ச்சி மற்றும் பெண்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் வரும் வாரத்திலிருந்து QITC மர்கசில் தொடரும் என அறிவிப்பு செய்தார்கள். மேலும் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் தொண்டரணி சகோதரர்கள் ஆற்றிய பணிகள் மற்றும் அவர்களுக்கு நன்றியினை கூறி நிறைவு செய்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் 600 -க்கும் அதிகமான சகோதர ,சகோதரிகள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர். உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக்குழுழுவினர் சிறப்பாக செய்திருந்தனர் தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஒத்துழைப்பு நல்கினார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!! பின்னர் வந்திருந்த அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவேற்றப்பட்டது.