ஞாயிறு, 20 அக்டோபர், 2013

கத்தரில் 15-10-2013 அன்று நடைபெற்ற தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

அல்லாஹுவின் மாபெரும் கிருபையால், கத்தரில் 15-10-2013 அன்று தியாகத்திருநாளாம் ஹஜ் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனையொட்டி கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சிறப்பு ஒன்று கூடல் நிகழ்ச்சியொன்றை ஃபனார் உள்ளரங்கத்தில் பெருநாள் தொழுகைக்கு பின் காலை 7:00 மணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

கத்தர் மண்டல தலைவர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் அனைவரையும் வரவேற்று, சகோதரர் அப்துஸ் ஸமது மதனி அவர்களை  தலைமையேற்று நடத்தி தருமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொருளாளர் சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள் "வீரத்தின் விளைநிலம் நபி இப்றாஹீம் அவர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். தனியொரு மனிதனாக நின்று ஏகத்துவ பிரச்சாரத்தை வீரத்துடனும் விவேகத்துடனும் சத்தியத்தை எடுத்துரைத்த விதம், இறை கட்டளைக்கு கீழ்படிதல், தியாகத்தில் உயர்ந்தவர்களாக திகழ்ந்தார்கள். இன்றும் அத்தியாகத்தை நினைவு கூர்ந்தவர்களாக நாம் கொண்டாடி கொண்டிருந்தாலும், நம் உள்ளத்தில் ஏகத்துவ உறுதியில்லாமல் இருக்கிறோம். ஆதலால் இன்றை தினத்தில் கொள்கை உறுதிபாட்டுடன் உண்மையான தவ்ஹீத்வாதிகளாக ஒவ்வொருவரும் திகழவேண்டும் என்று உறுதிமொழி எடுத்தவர்களாக கலையவேண்டும் என்று கூறினார்.

இதில் 600க்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதிரிகள் கலந்துக்கொண்டு பயனைடைந்தார்கள். இறுதியாக கத்தர் மண்டல் செயலாளர் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.