புதன், 3 டிசம்பர், 2014

கத்தர் மண்டலம் சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்களில் 160 யூனிட்டுகள் இரத்ததானம்




"தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்" என்ற ஒற்றை அஜெண்டாவில் கத்தர் மண்டலம் சார்பாக நடைபெற்ற இரத்தான முகாம்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு, 160 இரத்த யூனிட்டுகள் வழங்கினார்கள். 

கத்தர் மண்டலம் நடத்திய இரத்ததான முகாம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை

ஹமத் மெடிக்கல் நிறுவனமும் கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை ஒரு மாத காலம் முழுவதும் நடத்தியது. 

தமிழகம் மற்றும் நாடு தழுவிய அளவிலும், இன்னும் இலங்கை மற்றும் வளைகுடாவிலும் அமைதியான அதே சமயத்தில் ஆணித்தரமாகவும் வரலாற்று சிறப்பு மிக்க கருத்து ஒன்று முஸ்லிம் அல்லாத ஏனைய சமுதாய மக்களிடம் பதிவு செயப்பட்டது.

இதற்க்கு காரணம், ஊடகங்களின் அகராதியில் தீவிரவாதத்திற்கு அர்த்தம் முஸ்லிம்கள் என்று பரப்படும் மிகைபடுத்தபட்ட பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் முஸ்லிம்கள் மன ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் நியாயமான உணர்வுகள் மதிப்பளிக்கப்படாமல், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் அல்லல்கள், துயரங்கள் முக்கிய ஊடகங்களில் வெளிக்கொணரப்படாமல், அப்படியே செய்திகள் வந்தாலும் சிறிய பெட்டி செய்தியில் அடங்கிவிடுகிறது. இத்தகைய தவறாக சித்தரிக்கும் ஊடகங்களின் போக்கு மாற்றப்பட வேண்டும், இஸ்லாத்தின் மேல் உள்ள தவறான எண்ணங்களை அகற்ற வேண்டும் என்பதால் நாம் "தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தை" நமது அமைப்பு கையில் எடுத்துள்ளது என்று விளக்கி கூறி, பஞ்சம் பொழைக்க வந்த வளைகுடா நாடுகளில் அண்ணன் தம்பிகளாக பழகும் இக்காலகட்டத்தில், முஸ்லிம்களை பற்றி புரிந்துகொள்ளுங்கள் என்று அவர்களை நாம் நடத்தும் இரத்ததானம் முகாமிற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தோம்.

மாநில பேச்சாளர் மற்றும் மண்டல நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம்

தமிழகத்திலிருந்து வருகை தந்த மாநில பேச்சாளர் சகோதரர் அஷரப்தீன் பிர்தௌசி அவர்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆற்றிவரும் பல் வேறு சமுதாய பணிகளை பற்றியும், தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தின் அவசியத்தை பற்றியும் அவர்கள் செல்லும் எல்லா சொற்பொழிவுகளிலும் எடுத்துகூறினார்கள்.

வளைகுடாவில் வாழும் இந்திய பெரும்பான்மை மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்க்கும் வகையில், ஹிந்தி, மலையாளம், உருது, தமிழ், ஆங்கில மொழிகளிலும் மற்றும் இலங்கை சிங்கள சகோதர்களுக்கு சிங்கள மொழியிலும் நோட்டீஸ் தயார் செய்து, நான்காயிரம் நோட்டீஸ் அச்சடித்து விநியோகிக்கப்பட்டது.

அவ்வகையில் கடந்த மாதம் அக்டோபர் 17ஆம் தேதி, வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பின், சனையா கிளையில் முதன் முறையாக இரத்ததான முகாம் தொடங்கப்பட்டது. கொள்கை சகோதரர்கள் பம்பரமாக செயல்பட்டு, பல் வேறு தொழிலாளர் கேம்புகளிலும் மற்றும் பெரிய வணிக வளாகங்களிலும் இரத்தான நோட்டீஸ் வழங்கினார்கள்.

சிறுச்சிறு குழுவாக பிற மத சகோதரர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முஸ்லிம்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள், இஸ்லாம் அமைதியை போதிக்கின்றது என்றும், அதனையொட்டி கத்தர் மண்டலம் சார்பாக நடைபெறும் இரத்ததான முகாம் பற்றியும் சொன்னார்கள்

சனையா கிளை சகோதரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்துக்கொண்டார்கள், இவர்களில் 35 யூனிட்டுகள் இரத்ததானம் அளித்தார்கள்.

சனையா கிளை பொருப்பாளர்கள் சகோதரர் தாவூத் அவர்களும், சகோதரர் ரபீக் அவர்களும் சனையாவின் அனைத்து பகுதிகளுக்கும் துண்டு பிரசுரங்கள் தமிழ், மலையாளம், ஹிந்தி, சிங்களம் ஆகிய நான்கு மொழிகளிலும் விநியோகம் செய்தார்கள்.

அக்டோபர் 31 ஆம் தேதி, லக்தா கிளை, மைதர் கிளை, கரபா கிளை ஆகிய சகோதர்கள் 22 பேர் இரத்ததானம் செய்தார்கள்.

பின்னர் நவம்பர் 6 ஆம் தேதி அபூஹமூர் பலதியா முனிசிபாலிடி கேம்பில், 78 சகோதரர்கள் கலந்துகொண்டார்கள், இதில் 38 யூனிட்tuகள் இரத்ததானம் அளிக்கபட்டது. அபூஹமூர் கிளை பொருப்பாளர் சகோதரர் சம்சுதீன் அனைத்து ஊழியர் குடியிருப்புகளிலும் நான்கு மொழிகளில் நோட்டிஸ் வினயோகித்தார்கள்.

இறுதியாக நவம்பர் 14ஆம் தேதி துமமாவில், 150க்கும் மேற்பட்ட சகோதரர்கள் தன்னார்வத்துடன் ஜும்மா தொழுகைக்கு பிறகு மர்கசில் வந்து குவிந்தார்கள். அனைவருக்கும் மதியம் உணவு உபசரிப்புடன், பெயர் பதிவு நடத்தப்பட்டது. சரியாக 3 மணிக்கு ஹமத் மருத்துவ மனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய 10பேர் கொண்டு குழு இரத்ததானத்திற்கு முன், கொடையளிகளிடம் உடல் பரிசோதனைகள் செய்தார்கள். உடல் ஆரோக்கியம், இரத்த கொதிப்பு, ஹீமோகுளோபின் பரிசோதனை போன்ற உடல் பரிசோதனைக்குப் பின் தகுதியானவர்களை மட்டும் இரத்ததானம் கொடுக்க தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். 68 சகோதர்கள் குருதி கொடையளித்தார்கள்.

ஹமத் மெடிக்கல் நிறுவனம் பாராட்டு

கத்தரில் தொடர்ச்சியாக ஒரு மாதம் முழுவதும் இது போன்ற இரத்ததான முகாமை வெளிநாட்டு அமைப்பினர் யாரும் செய்யவில்லை என்று ஹமத் இரத்த வங்கி மருத்துவர்கள் பாராட்டினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...  எல்லா புகழும் ஏக இறைவனுக்கே... 







தமிழகத்தில் TNTJ நடத்திய தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் 2014 - ஒரு தொகுப்பு


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com