திங்கள், 22 செப்டம்பர், 2008

ஸகர் அல்கோர் சிறப்பு நிகழ்ச்சி












கடந்த 18-09-2008 அன்று வியாழக்கிழமை இரவு அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் ஸகர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அல்கோர் கிளை பொறுப்பாளர் சகோதரர் தேவியா குறிச்சி ஜியாவுதீன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள். முதலாவதாக மௌலவி அன்சார் அவர்கள் " நபிகளார் ஏற்படுத்திய ஒற்றுமையும் போலி ஒற்றுமையும் என்ற தலைப்பிலும் , மௌலவி முஹம்மத் அலி M.I.SC; அவர்கள் " சகாபாக்களின் கொள்கை உறுதி " என்ற தலைப்பிலும் , மௌலவி தொவ்பிக் மதனீ அவர்கள் " நபி ஸல்லாஹுஅலைஹிவஸ்ஸலம் அவர்கள் மீது அன்பு வைத்தல் " போன்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சினிடையே அல்கோர் சமூக கலாச்சார மையத்தின் தலைவர் கானம் அப்துல்லாஹ் அல் மொகநதி அவர்கள் வருகை தந்தார்கள். அவர்கள் ஆற்றிய உரையில் கத்தர் இந்திய தவ்ஹித் மையம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் , ஆவலோடு கலந்து கொண்ட சகோதரர்கள் மத்தியில் தன்னுடைய மகிழ்ச்சியயை வெளிபடுத்திக்கொண்டதோடு தன்னாலான ஒத்துழைப்புகளை தருவதாக கூறினார். இறுதியாக இரவு தொழுகை மௌலவி முஹம்மத் அவர்கள் தொழுவித்தார்கள் . மையத்தின் செயலாளர் சகோதரர் மசூத் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.ஸகர் உணவை சிறப்பாக தயாரித்து அனைவர்க்கும் பரிமாறினார்கள் . இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் .