திங்கள், 8 டிசம்பர், 2008

தியாக திருநாளில் உறுதிமொழி எடுப்போம்


கத்தரில் இன்று ஹஜ் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மால் அருகே அமைந்துள்ள ஈத்ஹா பள்ளியில் பெருநாள் தொழுகைக்கு ப்பின்னர் , QITC மர்கஸ் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் , தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள மார்க்க பேச்சாளர் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் " தியாக திருநாளில் உறுதிமொழி எடுப்போம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். ' இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து முழுக்க முழுக்க இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதற்காக ஹஜ் , குர்பானி போன்ற வழிபாடுகளை செய்யுமாறு இறைவன் வலியுறுத்துகிறான் . ஆனால் இதை அறியாத பலர் ஹாஜி என்ற பட்டத்தை பெறுவதற்காக ஹஜ் செய்கிறார்கள் , பெருமைக்காக குர்பானி கொடுக்கிறார்கள். நபி தோழர்களின் அரும் பெரும் தியாகங்களில் தான் இஸ்லாம் வளர்ந்து நிற்கிறது .இது போன்ற தியாகங்களை செய்யா விட்டாலும் குறைந்தது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வாழ்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த தியாக திருநாளில் நாம் உறுதி மொழி எடுப்போம் ' என்று தனது உரையில் அப்பாஸ் அலி கூறினார் . இந்நிகழ்ச்சிக்கு மர்கஸ் துணை தலைவர் சகோதரர் முஹம்மத் யூஸுப் தலைமை தாங்கினார் . செயலாளர் சகோதரர் மஸ் ஊத் அவர்கள் மர்கஸ் ஏற்பாடு செய்துள்ள " இரத்த தானம் " பற்றி அறிவிப்பு செய்து விட்டு நன்றி யுரை கூறினார் . நிகழ்ச்சி துவாவுடன் நிறைவேறியது. ஏராளமான தமிழ் முஸ்லீம் சகோதர சகோதிரிகள் இதன் மூலம் பயனடைந்து , தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.