வியாழன், 8 ஜனவரி, 2009

பாலஸ்தீன மக்களுக்கு துயர் துடைக்க‌


உதவும் கரங்கள் நீட்ட ! கத்தர் சமூகம் உங்களோடு!


இஸ்ரெலின் கடும் தாக்குதலுக்குள்ளாகியுள்ள பாலஸ்தீன மக்களுக்கு விரைவாக பொருளுதவி கிடைக்கும் வகையில் ,
இஸ்லாமிய அழைப்பு மையமும் ( கத்தர் சாரிட்டி) கத்தர் கால் என்ற தொலைதொடர்பு நிருவனமும் இணைந்து , எளிதான முறையில் தங்களுடைய தொலைபேசியிலிருந்து நன்கொடை அனுப்ப " தானியங்கி தொலைபேசி நன்கொடை சேவை" யை தொடங்கியிருக்கிறது.
இதற்கென்று பிரத்யேகமாக இரண்டு தொலைபேசி எண்களை அமைத்திருக்கிறது.எப்போது வேண்டுமானாலும் நேரிடையாகவும் விரைவாகவும் அனுப்பலாம்.
கத்தர் ரியால் 10 யை வழங்க 9001503 என்ற எண்ணையோ அல்லது ,
கத்தர் ரியால் 50 யை வழங்க 9001502 என்ற எண்ணையோ அழைக்கலாம்.
கூடுதலாக வழங்க விருப்பமுள்ளோர் இலக்கம் 1 யை தொடர்பு முடிவதற்குள் அழுத்தவும்.
நீங்கள் தேர்வு செய்த தொகை தொலைபேசி கட்டணத்தில் சேர்ந்துவிடும்.
இச்சேவை கத்தரில் வசிப்பவர்களுக்கு மட்டும் தான்.