ஞாயிறு, 12 ஜூலை, 2009

H1N1 காய்ச்சலால் உம்ரா அல்லது ஹஜ் செல்ல தடையில்லை

H1N1 காய்ச்சலால் உம்ரா அல்லது ஹஜ் செல்ல சவுதி அரசாங்கம் கெடுபிடி செய்துள்ளது என்று வெளிவந்த செய்தியை கத்தர் ஹஜ் கமிட்டி வன்மையாக மறுத்துள்ளது. இதனை கத்தர் ஹஜ் கமிட்டியின் உயர் அதிகாரி ஒருவர் கத்தர் நாளிதழில் தெரிவித்தார். மேலும் கத்தர் கமிட்டியின் அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படும் என்றும் கூறினார். கத்தர் ஹஜ் கமிட்டியின் துணை மேலாளர் ஜாஸ்சிம் அல் குபெயசி கூறுகையில் " இது சம்பந்தமாக ஹஜ் உம்ரா டிராவல் ஏஜண்டுகளுக்கு கட்டளைகளையும் எதையும் பிறபிக்கபடவில்லை என்று கூறினார். ஆனால் சவுதி அரசு ஹஜ்ஜுக்கு வரும் பயணிகளிடம் இக்காய்ச்சல் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தாமும் உட்படுவோம் என்று கூறினார். இந்த ஆண்டு ஹஜ் உம்ரா ஏற்பாடுகளின் போது எதிர் கொள்ளவேண்டிய விசயங்களை , விரைவில் கலந்து ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் . இக்கமிட்டியில் கத்தர் செம்பிறை சங்கம் , உள்துறை அமைச்சகம் , அவ்கப் மற்றும் இஸ்லாமிய துறை அங்கம் வகிக்கும் என்று கூறினார் . இக்கிருமி கத்தெரிலிருந்து செல்லும் பயணிகளிடம் பரவாமல் தடுக்க எல்லா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார். இக்கிருமி பரவாமல் தடுக்க , தகுந்த தற்காப்பு மூலமாக தான் வெல்ல முடியும்.அதிகமான கட்டுப்பாடுகளை விதிப்பதோ அல்லது அதே நேரத்தில் முழுமையாக அலட்சியம் செய்யவோ கூடாது. தொடக்கத்தில் நாம் எண்ணிய அளவிற்கு பீதியடை அவசியம் இல்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உம்ரா செல்பவர்கள் குறைந்துவிட்டனவே என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவித்தார் அந்த அதிகாரி . வழக்கம் போல இந்த வருடமும் அதே அளவு எண்ணிக்கையில் பெயர் பதிவுகள் நடந்து கொண்டிருக்கிறது என்றார். உண்மையில், இக்கிருமியால் பதிக்கப்பட்ட நாடுகளிருந்து புனித பயணிகள் ஒதுக்கீடு ( quota) குறைக்கப்பட்டுள்ளதால் , கத்தர் போன்ற அரபு நாடுகளின் ஒதுக்கீடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பல ஏஜண்டுகள் நம்பிக்கை தெரிவித்தனர். இக்க்காயச்ச்சல் ஏற்படுத்தியுள்ள பீதியால் ஓமான் , பஹ்ரைன் போன்ற நாடுகள் ஹஜ் செல்ல தடை விதித்துள்ள நிலையில் ,தொற்றும் அபாயம் உள்ளதால் ஹஜ் செய்ய தடை விதிப்பது குறித்து இஸ்லாமிய அறிஞர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்திருக்கிறது.

நன்றி : Gulf times 12july2009

------------------------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"
அல்குரான் 3:110

-------------------------------------------------------------------------------------