வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி




27-08-09வியாழன் இரவு கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக சிறுவர் ஜியாவுதீன் அவர்கள் " திருகுர்ஆன் திருமறையை தினமும் ஓதுங்கள் " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். அடுத்ததாக மௌலவி லாயிக் அவர்கள் "ரமலான் தரும் பாடம்" என்ற தலைப்பிலும் ,மௌலவி லாபிர் மதனி அவர்கள் " உறவை பேணுதல்" என்ற தலைப்பிலும் மௌலவி அன்ஸார் அவர்கள் " உணர படாத தீமைகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். " பித்ரா எனும் தர்மம் " என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள். ஒவ்வரு சொற்பொழிவுக்கு பின்னர் , சிறுவர் சிறுமியர்கள் குர்ஆனிலிருந்து தங்களுக்கு தெரிந்த சூராக்களை ஓதினார்கள். இறுதியாக இஸ்லாமிய அறிவு போட்டியை சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் நடத்தினார்கள். சகோதரர் மஸ் ஊத் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள். இரவு 10:30 மணிக்கு தொடங்கி 2:00 மணிவரை நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியின் அனைத்து அம்சங்களும் விறுவிறுப்போடு நடைபெற்றது . வருகை தந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யபட்டிருந்தது.