சனி, 19 செப்டம்பர், 2009

இப்தார் நிகழ்ச்சி 2009




கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் , கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்களுக்காக நேற்று 18/09/2009 வெள்ளிக்கிழமை பொது இப்தார் நிகழ்ச்சி ஒன்றை , அபூபக்கர் தனியார் மேல் நிலை பள்ளியில் ஏற்பாடு செய்து இருந்தது. சரியாக மாலை ஐந்து மணிக்கு மாநில தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ஒலி ஒளி கலந்தாய்வு ( video conferencing ) மூலம் தலைமையகம் சென்னையிலிருந்து " ரமலான் நம் மீது ஏற்படுத்திய மாற்றம் என்ன ? " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நோன்பு திறப்பத்தற்க்கான பேரீச்சம் பழம் , தண்ணீர் , ஜுஸ் ஆகியவைகள் நுழைவாயிலில் கொடுக்கப்பட்டது . நோன்பு திறந்தவுடன் , மக்ரிப் தொழுகையை சகோதரர் மௌலவி அன்சார் அவர்கள் நடத்தினார்கள் . பின்னர் வந்திருந்த அனைவருக்கும் , உணவு பரிமாறப்பட்டது. முப்பதுக்கும் மேற்பட்ட செயல் வீரர்கள் இப்தார் அரங்கத்தை அமைக்கும் பணியிலும் , உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறும் பணியிலும் சிறப்பாக செய்தனர் . அரங்கத்தின் அனைத்து துப்புரவு பணிகளையும் ICC நிறுவனம் சிறப்பான முறையில் செய்தது.இந்நிகழ்ச்சியில் எந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர சகோதிரிகள் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் இலவச சிடிக்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சி சிறப்பாக நடத்திதந்த அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும். அல் ஹம்துலில்லாஹ்!



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"
அல்குரான் 3:110