திங்கள், 30 நவம்பர், 2009

கத்தரில் ஈதுல் அதா கொண்டாட்டம்


கடந்த வெள்ளிகிழமை 27/11/2009 அன்று கத்தரில் ஈதுல் அதா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் இவ்வருடமும் , மால் அருகே உள்ள " அலி பின் அலி அலி முசல்மானியா பள்ளியில் சிறப்பு சொற்பொழிவை ஏற்பாடு செய்திருந்தது. மையத்தின் துணை தலைவர் சகோதரர் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் தலைமை வகித்தார்.
பின்னர் சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் , கதீப் அவர்களின் அரபி உரையினை மொழிபெயர்த்து உரையாற்றினார். இன்றைய தினம் இபுராஹீம் நபி அவர்களின் தியாக வரலாற்றை நினைவு கூர்ந்தவர்களாக , நம்முடைய தியாகத்தை ஒப்பு நோக்குகையில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தில் இருக்கிறோம் . நம் வாழ் நாள் முழுவதும் தியாக சீலர்களாக வாழ்ந்தாலும் தியாகத்தில் அவரிடத்துக்கு உயர முடியாது .எனினும் நாம் அவருடைய தியாகத்தின் வாசனையை நுகரவேண்டுமானால் ,நம்முடைய செயல் பாடுகளை அல்லாஹ்விற்காக மட்டும் , நன்மையின் பக்கம் நின்ற சாலிஹான நன் மக்களாக ஆகவேண்டும் என்றார்.
பின்னர் மையத்தின் செயலாளர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் , இன்ஷா அல்லாஹ் டிசம்பர் முதல் , நடைபெற இருக்கும் " இஸ்லாமிய அடிப்படை கல்வி " என்ற வகுப்பில் அனைவரும் வந்து சேருமாறு அழைப்பு விடுத்தார். அடுத்ததாக , கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் , " 2010 க்கான காலண்டர் வெளியிடப்பட்டது . முதல் பிரதியை மூத்த தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள் பெற்று கொண்டார்கள் . பின்னர் சகோதரர் லியாகத் அலி அவர்கள், " நல்அமல்களின் பக்கம் உங்கள் கவனம் எப்போதும் இருக்கவேண்டும் " என்ற சிறிய உரையாற்றினார். நூற்றுக்கணக்கான கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்கள் ,தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களோடு கலந்து கொண்டு , ஒருவர்கொருவர் தத்தமது வாழ்த்துக்களை பரிமாறிகொண்ட காட்சி , சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது . இது போன்ற சந்தர்பத்தை ஏற்படுத்தி தந்த அல்லாவிற்கே எல்லா புகழும் .
அல்ஹம்து லில்லாஹ் !-----------------------------------------------------"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"
அல்குர்ஆன் 3:110