செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

மாபெரும் இப்தார் நிகழ்ச்சி21-08-2010 சனிக்கிழமை அன்று கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் ,ஈத் பின் சாரிட்டியின் ஒரு அங்கமான கத்தர் கெஸ்ட் சென்டர் இணைந்து மாபெரும் இப்தார் நிகழ்ச்சி நடத்தியது. அந்நிகழ்வையொட்டி முஸ்லிம்களின் புண்ணியதலங்களில் ஒன்றான பைத்துல் முகதஸ் வரலாற்று பார்வை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை கத்தர் கெஸ்ட் சென்டரின் தாயி சகோ. முனாப் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இப்தாரில் கலந்து கொண்டு சிறப்பாக்கினர்.

மஃரிப் தொழுகையின் பின் உணவு பறிமாறப்பட்டது. நிகழ்ச்சிகள் சரியாக 07.00 மணிக்கு கத்தர் கெஸ்ட் சென்டர் இஸ்லாமிய அழைப்பாளர் சகோ.முனாப் ஸலபி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள். சகோதரர் முனாப் அவர்கள் "ரமலான் சிந்தனை" எனும் தலைப்பில் துவக்க உரையாற்றினார்.

அதனையடுத்து " ஸிராத் " எனும் தலைப்பில் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள அல் இர்ஷாத் கல்லூரி விரிவுரையாளர் சகோ. அப்துல் கரீம் (MISC) அவர்கள் சிறப்புரையாற்றினார். நோன்பு திறந்த அத்தருனத்தில் உள்ளத்தை அவ்வுரை அச்சுருத்தியது. மக்கள் அமைதி காத்து செவிமடுத்தனர்.

இடையே, இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர்களின் அறிமுகம் மற்றும் கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய அவர்களுக்கான “அடிப்படை பயிற்சி வகுப்பில்“ கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்ச்சியை (QITC) தாயி சகோ. முஹம்மத் அலீ MISC நடத்தினார்.

கத்தர் கெஸ்ட் சென்டரின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மை குழு தலைவர் சகோதரர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது ." இஸ்லாமியர்களும் பைத்துல் முகதஸ் இறை இல்லமும்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். இஸ்ரலேயிய படைகளால் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தில் சிக்குண்ட புண்ணியதலமான பைத்துல் முகதஸ் இறை இல்லத்தை குறித்து முஸ்லிம்கள் கொண்டிருக்கும் பார்வை என்ன என்பதை விளக்கினார். இஸ்ரேலிய பீரங்கிகளுக்கு பாலஸ்தீன் மக்கள் நெஞ்சை காட்டிநிற்கும் நெஞ்சுரத்தையும், நாட்டை இரண்டாக பிளந்து நெடுஞ்சுவர் அமைத்து ஊரை பிரித்து உறவை பிரிந்து தினந்தினம் சொல்லொனத்துயரை அனுபவித்து கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களின் அவலங்களை கண்முன்னே கொண்டு வந்து போது கேட்பவர்களின் மனம் கனமாகி போனது. அல் குர்ஆன் கூறும் பைத்துல் முகதசின் வரலாற்றினையும் இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் காணக்கிடைக்கும் பல்வேறு வரலாற்று பெட்டகங்களை ஆய்வு செய்து விளக்கிக் கூறினார் .

மாநபி வழியே நம் வழி என உருவாக்கி கொண்டால் தான் , செத்து மடிந்து சாகசம் புரிவதை காட்டிலும் , நபி தோழர்கள் அனுபவித்த வன்கொடுமைகளை அல்லாஹுவின் மேல் உறுதியான நம்பிக்கையும் , சுவனத்தை அடைய உளதூயமைக்கொண்டுவர்களாக திகழ்ந்ததால் அக்கொடுமைகளை பொறுத்துக்கொள்ள முடிந்தது. அல்லாஹ் பொருமையாளர்களின் பக்கம் இருக்கிறான். முஸ்லிம் சமுதாயம் மாநபி வழியில் ஒன்றிணைந்தால் ,ஆக்கிரமிப்பு இஸ்ரேலயர்கள் விரட்டப்பட்டு பைத்துல் முகதஸ் முழுவதுமாக முஸ்லிம்கள் கையில் வந்துவிடும் இன்ஷாஅல்லாஹ். என்று உணர்ச்சி பொங்க உரை நிகழ்த்தினார் .

இறுதியாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தேர்வு (குலுக்கல்) முறையில் பரிசில்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிகள் யாவும் சகோ. முனாப் அவர்கள் தொகுத்து வழங்க ,சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்களின் நன்றியுரையுடன் (ஹம்து ஸலவாத்துடன்) நிரைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்
"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!" அல்குரான் 3:110