கத்தரில் சென்ற வெள்ளிக்கிழமை 03-09-2010 அன்று மாபெரும் இப்தார் விருந்து மற்றும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது . அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் ஆறாவது ஆண்டாக இவ்வருட ரமலானில் மாபெரும் இப்தார் விருந்தை நடத்தியது . இந்நிகழ்ச்சி பின் மெஹ்மூத் பகுதியில் அமைந்துள்ள ,ஹம்ஜா பின் அப்துல் முத்தலிப் பள்ளிக் கூட உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது . மாலை 5:00 மணிக்கு ,சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்களின் துவக்க உரையுடன் , சகோதரர் அப்துல் கரீம் MISC அவர்கள் " குர் ஆன் கூறும் அறிவியல் உண்மைகள் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் , ரமலானில் மையத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து கூறினார். தமிழறிந்த சகோதரர்கள் ஆர்வத்துடன் இஸ்லாத்தையும் அதன் போதனைகளையும் அறிய முற்படவேண்டும் எனவும் மர்கசில் நடைபெறும் வாரந்திர மாதாந்திர பயான்களுக்கு வருகை தரவேண்டும் எனவும் கூறினார் . பின்னர் வருகை தந்த அனைவருக்கும் இப்தார் பதார்த்தங்கள் , நோன்பு கஞ்சி பரிமாறப்பட்டது . நோன்பு திறந்தவுடன் மக்ரிப் தொழுகை நிறைவேற்றபட்டது . பின்னர் அனைவர்க்கும் சுட சுட உணவு விருந்தளிக்கப்பட்டது . அரங்க ஏற்பாடுகள் துணை செயலாளர் சகோதரர் அப்துல் கபூர் அவர்களின் தலைமையில் சகோதர் கலீல் கிப்ரான் , சகோதர் பக்ரு , சகோதர் பாஷா ஆகியோர் அடங்கிய குழு சிறப்புடன் அமைத்திருந்தது . உணவு ஏற்பாடுகளை துணை செயலாளர் ஹாஜி முஹம்மது அவர்கள் தலைமையில் , சகோதரர் அபுதாகிர் , சகோதரர் ஜாபர் ,சகோதரர் அப்துல் ஜலீல் ஆகியோர் அடங்கிய குழு சிறப்புடன் செய்தது. சகோதரர் அஜ்மீர் அலி ,சகோதரர் அப்துல் காதர் அடங்கிய விளம்பர குழு , பல் வேறு தொழிலாளர் கேம்ப்களில் நிகழ்ச்சி பற்றி விளம்பரங்களை கொண்டு சேர்த்து அழைப்பு விடுத்தனர். தோஹாவின் பல் வேறு பகுதிகளிலிருந்தும் எண்ணூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் , பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைந்தார்கள். அல் ஹம்துலில்லாஹ் !
"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"அல்குரான் 3:110