திங்கள், 28 மார்ச், 2011

24-03-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்

அல்லாஹுவின் அருளால், மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி 24/03/2011 அன்று இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில் சகோ. முஹம்மது இலியாஸ் தலைமையில் நடைபெற்றது.


மார்க்க பயான்
 
டாக்டர். அஹ்மத் இபுறாஹீம் அவர்கள்- "நபித் தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பில், "ஹிந்த் பின்த் உத்பா[ரலி]" அவர்களுடைய வரலாற்றை கூறினார்கள்.
 
மௌலவி. முஹம்மது அலி அவர்கள் "இயற்கை சீற்றங்களும் ,இஸ்லாம் தரும் படிப்பினைகளும்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
எப்போதும் போல், சிறார்களுக்கான வகுப்பு, சகோ.அப்துல் கபூர் அவர்களால் நடத்தப்பட்டது.
 
அகீதா வகுப்பில் கலந்து கொண்டு ,அதிக மதிப்பெண்கள் பெற்று ,சான்றிதழ் பெற்றவர்களுக்கு Sheikh  Eid Social Center[Sheik Eid Charitable Association] சார்பாக, 'கைக்கடிகாரம்' பரிசாக வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட ஆண்களும்பெண்களும், சிறார்களும்  கலந்து கொண்டார்கள். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.