புதன், 6 ஏப்ரல், 2011

31-03-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்

அல்லாஹுவின் அருளால் ,மர்கஸ்  வாராந்திர பயான் நிகழ்ச்சி 31/03/2011 அன்று இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில்,QITC தலைவர்   டாக்டர் . அஹ்மத் இபுறாஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

QITC  துணை செயலாளர் சகோ.ஷாஜஹான்,அவர்கள் "நிரந்தரமான வெற்றியாளர்கள் யார்? "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள்  - "துவாக்களின் சிறப்புக்கள்" என்ற  தொடர் தலைப்பில்  உரையாற்றினார்கள்.
  சிறப்பு விருந்தினர் சொற்பொழிவு :
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சவூதி மர்கஸ் இயக்குனர், அஷ்-ஷைக் .பவ்வாஸ் பின் அப்துல்லாஹ்   அல்-காமிதி அவர்கள் "நபிவழியை பின்பற்றுவது கட்டாயம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
அதனுடைய தமிழாக்கத்தை சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி.அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் விளக்கினார்கள்.
இறுதியாக QITC  பொதுச்செயலாளர் மௌலவி. முஹம்மது அலி  அவர்கள், QITC மர்கசின் செயலாக்கம் பற்றி அரபியில் விளக்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில்100க்கும்மேற்பட்டஆண்களும்,பெண்களும்,சிறார்களும்  கலந்து கொண்டார்கள்..இரவுஉணவுஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.