வெள்ளி, 13 மே, 2011

12-05-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரகாத்துஹு......

அல்லாஹுவின் திருப்பெயரால்...

அல்லாஹுவின் அருளால் ,மர்கஸ்  வாராந்திர பயான் நிகழ்ச்சி 12/05/2011 அன்று  இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில்,QITC செயலாளர் சகோ.அப்துல் பாசித் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.

 QITC அழைப்பாளர் டாக்டர் .அஹ்மத் இப்ராஹிம்

அவர்கள்,"நபித்தோழியர் வரலாறு "என்ற தொடர் தலைப்பில் "அஸ்மா பின்த் உமைஸ்(ரலி)" அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.
QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் வெட்கம்" என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள். 
 
சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவீ .அப்துஸ்ஸமத் மதனி அவர்கள்   "சபிக்கப்பட்டவர்கள்  " என்ற தொடர்  தலைப்பில்  உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில்100க்கும்மேற்பட்டஆண்களும்,பெண்களும்,சிறார்களும்  கலந்து கொண்டார்கள்.

இதே நேரம்,குழந்தைகள் அறையில்,வழக்கம் போல் நடைபெறும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான "தர்பியா" நிகழ்ச்சியை ,சகோதரர்கள். அப்துல் கபூர் மற்றும்  தஸ்தகீர்  ஆகியோர் நடத்தினார்கள்.

இறுதியாக கேள்வி -பதில் மற்றும் அறிவிப்புகள் நடைபெற்றன. இரவுஉணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
=========================================================================================

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா. 
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:www.qatartntj.blogspot.com