ஞாயிறு, 12 ஜூன், 2011

09/06/2011 வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
இறைவனின் திருப்பெயரால்...

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 09/06/2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC செயலாளர் சகோ. A. முஹம்மத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், "நபித்தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பில் "அஸ்மா பின்த் உமைஸ்(ரலி)" அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் "இஸ்லாம் கூறும் சபை ஒழுக்கங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவீ . அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "சபிக்கப்பட்டவர்கள்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
இந்நிகழ்ச்சியில் 100 க்கும்மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை, சகோதரர். தஸ்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.

மேலும், QITC பொதுச் செயலாளர் மௌலவி. முகம்மதலி அவர்கள் 27-05-11 அன்று நடந்த பெண்களுக்கான எழுத்துத் தேர்வு போட்டியில் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்த சகோதரிகளின் பெயர்களை அறிவித்தார்கள்.
1. ஷமீனா பேகம் & ரஹானா சுல்த்தானா   
2. பானு இப்ராஹீம் & ஆமீனா பெனாசிர்
3. மெஹர்பானு அப்பாஸ் மந்திரி & சபீனா ரபீக்

இறுதியாக அறிவிப்புகள் மற்றும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரத்திற்கான பதில்களும் சொல்லப்பட்டன.

இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா, கத்தர்.