ஞாயிறு, 10 ஜூலை, 2011

07/07/2011 வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் திருப்பெயரால்...

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 07/07/2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC செயலாளர் சகோதரர் A. சாக்ளா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கத்தர் கஸ்ட் சென்டர் அழைப்பாளர் சகோதரர் M. ஷாஜஹான் அவர்கள், "இஸ்லாமும் இங்க்லீஷ் மீடியமும்" என்ற தலைப்பில் கிறித்தவ மிஷன் பள்ளிக்கூடங்களில் படிக்கும் முஸ்லிம்களின் நிலை பற்றி உரையாற்றினார்கள்.

 QITC அழைப்பாளர் மௌலவி தமீம் அவர்கள், "நபி வழி திருமணம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "ரமலான் நோன்பின் நோக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.


இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை QITC செயலாளர் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.

 இறுதியாக அறிவிப்புகள் மற்றும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.