ஞாயிறு, 31 ஜூலை, 2011

கத்தர் QITC மர்கசில் 29-07-11 அன்று பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹுவின் அருளால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களே நடத்தும் "பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி", தோஹா QITC மர்கசில் 29-07-2011 அன்று மாலை 7:00 மணிக்கு துவங்கியது.

 சகோதரி ஷமீனா பேகம் அவர்கள் "ஒரு மூமின் மற்றொரு மூமினுக்கு செய்ய வேண்டிய கடமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சகோதரி அஷ்ரஃப் நிஷா அவர்கள் “ஜின்களும் வழிகெடுக்கும் ஷைத்தானும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ரமலான் சிறப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த 13 வயதிற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளுக்கான பேச்சுப் போட்டியில், மாணவி நஜிஹா “நபியை நேசிப்போம்” என்ற தலைப்பிலும், மாணவி அர்ஷதா மர்யம் “பொறுமை” என்ற தலைப்பிலும் பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.