சனி, 10 செப்டம்பர், 2011

தோஹா QITC மர்கசில் 08-09-11 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் திருப்பெயரால்...
தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 08-09-2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், "நபித்தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பில் "உம்முல் முன்திர்"  அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "நபி வழியை பின்பற்றுவோம்" என்ற தொடர் தலைப்பில் தொழுகைக்குப் பின் ஓதவேண்டிய துவாக்கள் பற்றி வலியுறுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சமீபத்தில் இஸ்லாத்தைத் தழுவிய தாம்பரத்தை சேர்ந்த சகோதரர் பாண்டியன் என்ற முஹம்மத் அவர்களுக்கு QITC சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அச்சகோதரர் தான் சவுதியில் பணிபுரிந்த போதே இஸ்லாத்தைப்பற்றி அறிந்ததாகவும், தன் தாயாரின் நிலைப்பாட்டால் இஸ்லாத்தை தழுவ காலதாமதம் ஏற்பட்டதாகவும், தான் ஊருக்குப் போகும் போது தன் குடும்பத்தினரையும் இஸ்லாத்தின் பால் அழைப்பேன் என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை சகோதரர் அப்துல்கபூர் அவர்கள் நடத்தினார்கள்.

இறுதியாக அன்றைய பயானிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும் வாராந்திர அரபி வகுப்பு இன்ஷாஅல்லாஹ் 16-09-11 வெள்ளிக்கிழமை முதல் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!