சனி, 12 நவம்பர், 2011

06-11-2011 கத்தரில் ஈதுல் அதா பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு.

கத்தரில் 06-11-2011 அன்று ஈதுல் அதா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஹஜ் பெருநாள் குத்பா பேருரை தமிழாக்கம் மற்றும் சகோதர சங்கமம் சிறப்பு நிகழ்ச்சி ஃபனார்  ஆடிடோரியத்தில் ஹஜ் பெருநாள் தொழுகைக்குப்பின் காலை 7:00 மணிக்கு நடைபெற்றது.

மையத்தின் தலைவர் Dr. அஹமத் இப்ராஹீம் அவர்கள் தலைமை வகித்தார்கள். ஃபனாரின் பிரதிநிதியாக வெளிநாட்டினருக்கான தாவா பிரிவின் மேற்பார்வையாளர் சகோதரர் ஷுவூர் அஹ்மத் அவர்கள் கலந்து கொண்டார்கள்.


மண்டலப் பேச்சாளர் மௌலவி அன்சார் மஜிதி அவர்கள் குத்பா பேருரை தமிழாக்கமாக "தியாகத்திற்குத் தயாராகுவோம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் (வீடியோ).

பின்னர் மையத்தின் இணைச் செயலாளர் சகோதரர் ஃபக்ருத்தீன் அவர்கள் மையத்தின் செயல்பாடுகளை விளக்கி நன்றியுரையற்றினார்கள்.

இந்த சகோதர சங்கமம் சிறப்பு நிகழ்ச்சியில் 550 க்கும் மேற்பட்ட கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்கள், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களோடு கலந்து கொண்டு, ஒருவருக்கொருவர் தத்தமது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

அல்ஹம்து லில்லாஹ்!


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு.

அன்பிற்குரிய சகோதர சகோதாரிகளே!

இன்ஷா அல்லாஹ்! வரக்கூடிய 06-11-2011 ஹஜ் பெருநாள் (ஈதுல் அத்ஹா)தினத்தன்று சூக் ஃபலா மற்றும் சூக் வாகிஃபிற்கு அருகிலுள்ள ஃபனார்  ஆடிடோரியத்தில் QITC நடத்தும் குத்பா பேருரை தமிழாக்கம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் மவ்லவி. அன்சார் மஜிதி (மண்டலப்பேச்சாளர் - கத்தர்) அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள்.

எனவே தாங்கள் தங்களின் இருப்பிடத்திற்கு அருகில் திடல் தொழுகை மற்றும் குத்பா எனும் பேருரையை முடித்து விட்டு ஃபனார் ஆடிடோரியத்திற்கு வந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும். தமிழறிந்த இந்திய இலங்கை சகோதர சகோதரிகள் தாங்களும், தங்கள் உறவுகளுடனும், நண்பர்களுடனும் ஈதை சிறப்புடன் கொண்டாட வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பெண்களுக்கு தனி இட வசதியும், ஃபனார் கட்டிடத்திற்கு கீழ் பகுதியில் வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளது. மேலும் காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெருநாள் தொழுகை திடலில் தொழுவது நபிவழி  என்கிற காரணத்தினாலும், அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் விதத்தில் குறிப்பாக மாத விலக்கு உள்ள பெண்களும் கலந்துகொள்ள வேண்டும் அதுதான் நபிவழி என்பதாலும் இம்முறை ஃபனார்  ஆடிடோரியத்திற்கு மாற்றப் பட்டுள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். முன்புபோல் அலி பின் அலி அல் முசல்மானி பள்ளியில் QITC - யின் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறாது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த தகவலை நம்முடைய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எடுத்து சொல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.