சனி, 31 டிசம்பர், 2011

QITC மர்கசில் 29-12-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. 

அல்லாஹ்வின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 29-12-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர் M.S.ஃபக்குருதீன் அவர்கள், "அறிவுரை பயனளிக்குமா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

அடுத்ததாக QITC அழைப்பாளர் மவ்லவி லாயிக் அவர்கள், திருக்குர்ஆன் அத்தியாயம்-103 "அல் அஸ்ர் (காலம்)" விளக்கம் குறித்து உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் மவ்லவி முஹம்மத் தமீம் MISc அவர்கள், "இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல்" என்ற தொடர் தலைப்பில் குழந்தை வளர்ப்பு குறித்து உரையாற்றினார்கள்.

QITC பொருளாளர் பீர் முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக QITC துணைத்தலைவர் ஜியாவுத்தீன் அவர்கள் புதிதாக வந்திருந்த அனைத்து சகோதரர்களும் நமது மர்கசில் உறுப்பினராகும்படி கேட்டுக்கொண்டு, QITC வெளியிட்டுள்ள 2012 காலண்டர் மற்றும் புதிய தலைப்புகளில் மார்க்க விளக்க DVD/CD-க்கள் மர்கசில் கிடைக்கும்; அவற்றை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

மேலும், QITC செயலாளர் மவ்லவி முஹம்மத் அலி MISc அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்..

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.