ஞாயிறு, 8 ஜனவரி, 2012

QITC மர்கசில் 06-01-2012 அன்று நடைபெற்ற 26-வது வார அரபி பாட வகுப்பு


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் 06-01-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் வாராந்தோறும் நடத்தப்படும் ஆரம்பநிலை அரபி பாட வகுப்பு (26-வது வாரம்) நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வகுப்பை நடத்தினார்கள்.

மேலும், இன்ஷாஅல்லாஹ் அடுத்த வாரம் 13-01-2012 அன்று இத்தொடர் வகுப்பின் இறுதியாக தேர்வு நடைபெற இருப்பதால், அனைவரும் தயாராக வரும்படி கேட்டுக்கொண்டார்கள்.

தமிழறிந்த இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.