சனி, 25 பிப்ரவரி, 2012

24-02-2012 நடைபெற்ற அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் 24-02-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் அரபி இலக்கணப் பயிற்சியின் முதலாவது வகுப்பு நடைபெற்றது. இன்ஷாஅல்லாஹ் இவ்வகுப்பு இனி வாராந்தோறும் தொடர்ந்து நடைபெறும்.சவுதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி. அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் எளிய முறையில் இவ்வகுப்பை நடத்தினார்கள்.

தமிழறிந்த இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.