சனி, 11 பிப்ரவரி, 2012

கத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 09-02-2012

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 09-02-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை மண்டல துணை செயலாளர் சகோ.காதர் மீரான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர். வக்ரா ஃபக்ருதீன் அவர்கள், "வசீலாவைக் கொண்டு உதவி தேடுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் அவர்கள், "சமூக மறுமலர்ச்சியின் திறவுகோல் எது?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, QITC அழைப்பாளர் மௌலவி, அன்சார் மஜீதி அவர்கள் "காதலர் தினமும்,கலாச்சார சீரழிவுகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர - சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும், 'அரபி ஆரம்ப நிலை தேர்வு' எழுதியவர்களின் தரங்களையும் கூறினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.