வியாழன், 23 பிப்ரவரி, 2012

QITC-யின் தர்பியா பயிற்சி முகாம் - 17/02/2012

بسم الله الرحمن الرحيم

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக நிர்வாகிகள், தாயிகள் மற்றும் கிளை பொறுப்பாளர்களுக்கான தர்பியா பயிற்சி முகாம் 17/02/2012 வெள்ளிக்கிழமை மதியம் 2:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை QITC மர்கசில் சகோதரர், Dr.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

"இறைவனை பயந்து வாழ்வோம்" என்ற தலைப்பில் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்கள்.

"மாற்றப்பட்ட சட்டங்கள் ஜமாத்தின் மறு ஆய்வுகள்" என்ற தலைப்பில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் மவ்லவி அப்துன் நாசிர் M.I.Sc அவர்கள் தாயகத்திலிருந்து ஆன்-லைன் மூலம் உரையாற்றினார்கள்.

"தொழுகை ஓர் விளக்கப்பாடம்" என்ற தலைப்பில் மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.

QITC பொதுச்செயலாளர் மற்றும் தாவா குழு தலைவர் மவ்லவி முஹம்மத் அலீ அவர்கள் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு” குறித்து விளக்கம் அளித்தார்கள்.

இறுதியாக QITC துணைத் தலைவர் ஜியாவுத்தீன் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தாயிகள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.