ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

13-04-2012 கத்தரில் "சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி"

அல்லாஹ்வின் பேரருளால்,


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின், கத்தர் மண்டலம் "மாபெரும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி" யை 13-04-2012 வெள்ளியன்று மாலை 6:30 மணி முதல் 10:00 மணி வரை ,கத்தர் அரசு இஸ்லாமிய அழைப்புத் துறை அலுவலக [ஃபனார்] உள்ளரங்கத்தில், ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்குமண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

துவக்கமாக மண்டல தலைவர், டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் 'வரவேற்புரை' நல்கிவிட்டு, "நல்லறங்களில் பால் விரையுங்கள்!" என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி, அன்ஸார் மஜீதி அவர்கள் "மன அமைதி தரும் வணக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதற்கடுத்து,QITC அழைப்பாளர் மௌலவிதமீம்M.I.Sc., அவர்கள் "அல்குர்'ஆனும் - உலக அதிசயங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக்கொடுப்போர்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் 'கத்தர் மண்டல ஜமாஅத்தின் செயல்பாடுகளை' விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.


அடுத்து, 'அரபி ஆரம்ப நிலை வகுப்பு' தேர்விலும், 'இஸ்லாமிய அறிவுப்' போட்டியிலும் கலந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் எடுத்த அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவாக,கத்தர் மண்டல துணைத் தலைவர், சகோதரர். ஜியாவுதீன் அவர்கள் 'நன்றியுரை' ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.