சனி, 9 ஜூன், 2012

07-06-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 07-06-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைச் செயலாளர் சகோதரர்.அப்துல் பாசித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.துவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் "மரணத்திற்குப் பிறகும் தொடரும் நன்மைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி, லாயிக் அவர்கள் "வருமுன் காப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


இறுதியாக,மண்டல அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் "தேர்வு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம், அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.