ஞாயிறு, 8 ஜூலை, 2012

கத்தர் மண்டல ரமலான் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை 06/07/2012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்தின்,கத்தர் மண்டலகிளையில் ரமலான் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் கூட்டம்,மண்டல மர்கஸ் உள்ளரங்கத்தில்,06-07-2012 வெள்ளியன்று மாலை 7:00 மணி முதல் 10 .௦௦ மணி வரை ,மண்டலதுணைச் செயலாளர் சகோதரர்.அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. துவக்கமாக, மண்டலதுணைச் செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் "வரவேற்புரை" நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக சகோதரர் M .I சுலைமான் .அவர்கள் தாயகத்தில் இருந்து "தாவா வில் நமது பங்கு" என்ற தலைப்பில் ONLINE மூலமாக உரையாற்றினார்கள் தனது உரையில் தாவா செய்வது அதற்கு உதவி செய்வது நம்மீது சுமத்தப்பட்ட கடமை அதை நிர்வாகிகள் அழைக்காமலேயே நாமாக முன்வந்து இந்த தாவா பணிக்கு நான் இந்த இந்த வகையில் உதவி செய்கிறேன் என்று சொல்லவேண்டும் என்றும் பித்ரா வின் அவசியம் அதை எப்படி வசூலிப்பது மற்றும் நாம் எவ்வாறு அந்த பித்ராவை முறையாக விநியோகம் செய்கிறோம் என்பது போன்ற தகவல்களை சொல்லி மக்களை ஆர்வமூட்டினார்கள்.

பின்னர் எதிர்வரும் ரமலான் மாதம் நடத்தவுள்ள சிறப்பு நிகழ்சிகளை மண்டல இணைச் செயலாளர் வக்ரா ,ஃ பக்ருதீன் அவர்கள் விளக்கினார்கள். மண்டல செயலாளர் முஹமத் அலி அவர்கள் மண்டல கிளைகளுக்கு சிறப்பு அழைப்பாளரின் பயான் நடத்துவது பற்றிய விபரங்களை கிளை பொறுப்பாளர்களிடம் கேட்டு முடிவு செய்தார்கள். பொருளாளர் சகோதரர் .இல்யாஸ் அவர்கள் கடந்த ரமாலான் சிறப்பு நிகழ்சிகளுக்கு ஆன செலவு விபரங்களை தெரிவித்து இந்த வருட ,பித்ரா தொகை எவ்வளவு என்பதை அறிவித்தார்கள். பின்னர் மக்களிடம் ரமலான் சிறப்பு நிகழ்சிகளை சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் மக்களிடம் கேட்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. நிகழ்ச்சியில் 75 சகோதரர்கள் கலந்துகொண்டார்கள்

இறுதியாக,மண்டல துணைச் செயலாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் "நன்றியுரை" நவின்றார்கள்.

வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!