திங்கள், 6 ஆகஸ்ட், 2012

சவூதி மர்கஸ் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 02/08/2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 02/08/2012  வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய  "ரமலான் ஸஹர் நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" சவூதி மர்கஸ் உள்ளரங்கத்தில்  இஷா மற்றும் இரவு தொழுகையை தொடர்ந்துஇரவு 10.30 மணி  முதல் அதிகாலை 3.30   மணிவரை மண்டல துணைச்செயலாளர் சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சகோதரர் .அப்துர்ரஹ்மான்    அவர்கள் வரவேற்புரை வழங்க  .அடுத்ததாக கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் அழைப்பாளர் மௌலவி .இஸ்ஸத்தின் ரில்வான் ஸலஃபி அவர்கள் "இஸ்லாத்தில் எது நாகரீகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

அடுத்ததாக  சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர்.அப்துஸ் சமத் மதனீ அவர்கள்  "உலக மோகத்தில் உயர்ந்தோனின் திருப்பிதியா?" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

அடுத்ததாக  தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர் .எம்.எம். சைபுல்லாஹ் Misc அவர்கள் "இஸ்லாம் கூறும் சுயமரியாதை" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அவர்கள் தனது உரையில் நபி ஸல் அவர்கள் தனது சகாபாக்களை எவ்வாறு சுயமரியாதையோடு வாழ வழிகாட்டினார்கள். அல்லாஹ்வை தவிர யாருக்கும் சிரம் பணியக்க்கூடாது என்று சுய மாரியாதையோடு வாழ பழக்கினார்கள் என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளின் மூலம் விளக்கினார்கள் (வீடியோ).

வக்ரா ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின்    மார்க்கஅறிவுப்போட்டியில்முதல், இரண்டு, மற்றும் மூன்றாம் இடம் பிடித்த    சிறுவர் சிறுமியருக்கு முன்னாள் நிர்வாகிகள்,மற்றும்  சகோதரர்  அப்துஸ்ஸமத் மதனீ, சகோதரர். சைபுல்லாஹ் ஹாஜா  Misc ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். மேலும் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் நடைபெற்ற பெண்கள் மார்க்க அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மண்டல  செயலாளர் சகோதரர் .முகமது அலி  அவர்கள் எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள். லக்தா கிளையின் பொறுப்பாளர் சகோதரர்  .ஜலால்  அவர்கள் நன்றியுரை  வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் 450க்கும் அதிகமான சகோதர ,சகோதரிகள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர்.வந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவு பரிமாறப்பட்டது .உணவுக்கான ஏற்பாட்டினை  உணவுக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.  தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் வெக்கையையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியது நிகழ்ச்சிக்கு  வந்திருந்த  மக்களின்  பாராட்டை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.