சனி, 11 ஆகஸ்ட், 2012

கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம் 08/08/2012

அல்லாஹ்வின் பேரருளால்,
வழமையாக நடைபெறும், கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம் மண்டல மர்கசில் [QITC] 08-08-2012 புதன்கிழமை மாலை 7.30 மணி முதல் 8.15 மணி வரை நிர்வாகக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சவூதி மர்கஸ் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் குறை, நிறைகள், மற்றும் எதிர்வரும் அல்க்ஹோர் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியில் செய்யப்படவேண்டிய ஏற்ப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

மண்டல இணைச் செயலாளர். வக்ரா .ஃபக்ருதீன் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எட்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு முன்னதாக தொண்டரணியின் கூட்டம் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.