திங்கள், 20 ஆகஸ்ட், 2012

QITC- நடத்திய மாபெரும் "இப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" அதில் சகோதரர் ஜீவன் இஸ்லாத்தை ஏற்றார்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 17/08/2012 வெள்ளிக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய மாபெரும் "இப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" அல் சத் விளையாட்டு உள்ளரங்கத்தில் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மண்டல துணைச் செயலாளர் சகோதரர். A. சாக்ளா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக சகோதரர். M. முஹம்மத் அலி M.I.Sc அவர்கள் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள். அடுத்ததாக தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் M.I.Sc அவர்கள் "ஏழை ஆகிவிடாதே!" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 

பின்னர் இலங்கை சகோதரர் ஜீவன் அவர்களுக்கு சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் M.I.Sc அவர்கள் இஸ்லாமிய கொள்ளையை விளக்கினார்கள். அவர் இஸ்லாத்தை தான் வாலவியல் நெறியாக ஏற்றுக்கொண்டு தனது ஜீவன் என்ற பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டார் வந்திருந்தநோன்பாளிகளுக்கு இது நெகிழ்வை ஏற்படுத்தியது.

பின்னர் வந்திருந்த அனைவருக்கும் இப்தார் செய்வதற்கான சிற்றுண்டி வழங்கப்பட்டு மக்ரிப் தொழுகை நிறைவேற்றப்பட்டது.

மண்டல துணை பொருளாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள். துணை செயலாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் கூட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் இப்தார் உணவு பரிமாறப்பட்டது. உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக்குளுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஒத்துழைப்பு நல்கினார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!