திங்கள், 29 அக்டோபர், 2012

26-10-2012 கத்தர் மண்டல "ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு மற்றும் சிறப்பு சொற்பொழிவு

அல்லாஹுவின் அருளால், 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலம், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக "ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு மற்றும் சிறப்பு சொற்பொழிவு" நிகழ்ச்சி 26-10-2012 வெள்ளி  காலை  7 மணி முதல் 8  மணி வரை  "கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறை [ஃபனார்]" அலுவலக  கட்டிடத்தில்  உள்ள கேட்போர் கூடத்தில், மண்டல  தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.முஹம்மத் அல்தாஃபி அவர்கள் "தியாகத்திற்கு தயாராகுங்கள்" என்ற தலைப்பில் இப்ராஹீம் (அலை), நபி(ஸல்) மற்றும் சஹாபாப்பெருமக்கள் ஆகியோர் செய்த தியாகங்களை தெளிவாக எடுத்துரைத்து, நாமும் தியாகம் தொடர்ந்து செய்ய சபதம் எடுப்போம் என வலியுறுத்தி சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள்.

மண்டல இணைச் செயலாளர் சகோதரர். எம்.எஸ்.ஃபக்ருத்தீன் அவர்கள் மையத்தின் செயல்பாடுகளை தெளிவாக விளக்கிவிட்டு,பின்னர் நன்றியுரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையைச் சார்ந்த 550 க்கும் மேற்பட்ட கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்கள், தங்கள் குடும்பம்   மற்றும் நண்பர்களோடு  கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.