புதன், 31 அக்டோபர், 2012

28-10-2012 கத்தர் மண்டல மர்கஸில் "இரத்ததான முகாம்"

அல்லாஹ்வின் பேரருளால்,

தியாக திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத் கத்தர் மண்டலமும்  [கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் - QITC], ஹமத் மெடிக்கல் கார்ப்பரேஷனும் [HMC] இணைந்து 28-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2 மணி முதல் "இரத்ததான முகாமைநடத்தியது.

தோஹா QITC மர்கஸில் இரவு 8 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்ட சகோதர - சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

இதில் முதல்கட்ட மருத்துவ பரிசோதனையில், பங்கு கொண்ட 107 பேரில் 49 சகோதரரர்கள் தகுதி பெற்று இரத்த தானம் கொடுத்தார்கள். 5 சகோதரிகள் உட்பட 58 பேர் முதல்கட்ட மருத்துவ பரிசோதனையில் தகுதி பெறாததால் இரத்த தானம் கொடுக்க முடியாமல் போனது.

இந்த சமுதாய பணியை பாராட்டி ,ஹமத் மெடிக்கல் கார்ப்பரேஷன் அதிகாரிகள், கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்திற்கு  "பாராட்டு சான்றிதழ்" வழங்கி சிறப்பித்தார்கள்.

கத்தர் நாட்டில் தமிழ் பேசக்கூடிய இயக்கங்களில்,இது போன்ற இரத்த தான முகாம்களை ,கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் மட்டும் தான் நடத்தி வருகிறது -என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உயிரை காக்கும் இம்மனித நேயமிக்க செயலில் ஆர்வமுடன் பங்குகொண்ட அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

"ஒரு மனிதரை வாழ வைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" - திருக்குர்ஆன் 5:32

அல்ஹம்துலில்லாஹ்.