ஞாயிறு, 4 நவம்பர், 2012

01-11-2012 கத்தர் மண்டல மர்கஸில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் "

அல்லாஹுவின் அருளால், 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலம்,கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி 01-11-2012 வியாழன் மாலை 7:45 மணி முதல் இரவு 10:45 மணி வரை மண்டல மர்கஸில், மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. முஹம்மத் அல்தாஃபி அவர்கள் நம் சகோதர-சகோதரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு குர்'ஆன்-ஹதீஸ் அடிப்படையில் விடையளித்தார்கள்.

அதிகமான கூட்டம் காரணமாக, உள்ளரங்கத்தில் இடமில்லாததால், ஆண்களுக்கு வெளிப்பகுதியிலும், பெண்களுக்கு வழக்கமான அறை போக கூடுதலாக ஒரு அறையும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையைச் சார்ந்த 350 க்கும் மேற்பட்ட கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம் சகோதர- சகோதரிகள், தங்கள் குழந்தைகளோடு கலந்து கொண்டார்கள்.

வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.