ஞாயிறு, 16 டிசம்பர், 2012

13-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 13-12-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை இணைச் செயலாளர் வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் லாயிக் அவர்கள் "கியாம நாளை அறிவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "ஃபஜ்ர் தொழுகையும்-தவ்ஹீத்வாதிகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய, தொடர்ந்து மண்டல இணை செயலாளர் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.