வியாழன், 27 டிசம்பர், 2012

இஸ்லாம் உண்மையானது என்பது நிரூபிக்கப்பட்டது!


அல்லாஹ் கூறும் பெறிய பத்து அடையாளங்கள் உலகத்தில் நிகழும்வரை உலகம் அழியாது என இஸ்லாம் சவால்விடுகிறது. அதை நிரூபிக்கும் நிகழ்வாக, உலகமே 2012 டிசம்பர் 21ம் நாள் உலகம் அழியும் என சொன்ன போது, அதை மறுத்த இஸ்லாம், 1400 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் அவன் தூதர் மூலமாக உலகம் எப்போது அழியும், அதன் அறிகுறி என்ன என்பதை தெளிவாக கூறிவிட்டான். அது நிகழும் வரை உலகம் அழியாது என நம்பியது. அந்த உன்மை  22ம்தேதி உலத்துக்கே புரிந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

உலகம் எப்போது அழிக்கப்படும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான். நபிமார்களோ, வானவர்களோ அந்த நாள் எப்போது என்பதை அறிய முடியாது. ஆயினும் அந்த நாள் நெருங்கும் போது ஏற்படும் அடையாளங்கள் சிலவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துச் சென்றனர்.


சிறிய அடையாளங்கள்:
 • மகளின் தயவில் தாய்
 • பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
 • குடிசைகள் கோபுரமாகும்
 • விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
 • தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
 • பாலை வனம் சோலை வனமாகும்
 • காலம் சுருங்குதல்
 • கொலைகள் பெருகுதல்
 • நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
 • பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
 • நெருக்கமான கடை வீதிகள்
 • பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
 • ஆடை அணிந்தும் நிர்வாணம்
 • உயிரற்ற பொருட்கள் பேசுவது
 • பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
 • தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
 • பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்
 • சாவதற்கு ஆசைப்படுதல்
 • இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
 • முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
 • இது வரை நிகழாத அடையாளங்கள்
 • யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
 • கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
 • யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
 • கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
 • அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
 • எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்
 • செல்வம் பெருகும்
 • மாபெரும் யுத்தம்
 • பைத்துல் முகத்தஸ் வெற்றி
 • மதீனா தூய்மையடைதல்

மாபெரும் பெறிய பத்து அடையாளங்கள்:
 • 1 - புகை மூட்டம்
 • 2 - தஜ்ஜால்
 • 3 - ஈஸா நபியின் வருகை
 • 4 - யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
 • 5 - அதிசயப் பிராணி
 • 6 - மேற்கில் சூரியன் உதிப்பது
 • 7, 8, 9 - மூன்று பூகம்பங்கள்
 • 10 - பெரு நெருப்பு
நன்றி: tntjkuwait.com


மறைவான விஷயங்களை எவராலும் அறிய இயலாது :
நாளை என்ன நடக்கவுள்ளது?. அடுத்த நிமிடம் என்ன நடக்க இருக்கின்றது? என்பதை அறியும் ஆற்றல் எந்த மனிதருக்கும் இல்லை. இதை சிந்திக்கும் திறன் படைத்த யாரும் விளங்கிக்கொள்ளலாம். அப்படி இருக்கும்போது டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றது என்ற செய்தி எப்படி மற்ற மனிதர்களுக்குத் தெரியும் என்ற சாதாரண சிந்தனைத்திறன் இருந்தாலே இது மிகப்பெரிய கட்டுக்கதை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
வல்ல இறைவன் தனது திருமறையில் கூறிக்காட்டுகின்றான்:
யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன். (அல்குர்-ஆன் 31 : 34)
மேற்கண்ட ஐந்து விஷயங்களையும் படைத்த இறைவனைத்தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள இயலாது.
மற்றொரு இடத்தில் அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்:
(முஹம்மதே) யுக முடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது? அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே. (அல்குர்-ஆன் 79 : 42முதல் 45வரை)
மறைவான செய்திகளை தனது தூதர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருக்கின்றான். அப்படி சில மறைவான செய்திகளை தனது தூதருக்கு அறிவித்துக் கொடுத்த இறைவன், தனது தூதருக்குக் கூட உலக அழிவு நாள் எப்போது வரும் என்ற செய்தியை அறிவித்துத்தரவில்லை என்றால் வேறு எந்த மனிதருக்காவது இந்த செய்தியை அறிந்து கொள்ள இயலுமா?
அதுமட்டுமல்லாமல், வல்ல இறைவன் தனது திருமறையில் கூறியிருக்கக்கூடிய முன்னறிவிப்புகளின் அடிப்படையிலும், நபிகளார் கூறிக்காட்டியுள்ள முன்னறிவிப்பின் படியும் உலக முடிவு நாள் என்பது இரண்டு மூன்று நாட்களில் நடந்து முடிந்துவிடாது. அது வருவதற்குண்டான சில அடையாளங்களை அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லிச் சென்றுள்ளார்கள். எண்ணற்ற சிறிய அடையாளங்களும், மாபெரும் பத்து அடையாளங்களும் நிகழாதவரை உலக அழிவுநாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் படிக்க: tntj.net