திங்கள், 28 ஜனவரி, 2013

25-01-2013 கத்தர் மண்டல "த'அவாக்குழு கூட்டம்"

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில் [QITC] , "த'அவாக்குழு கூட்டம்", 25-01-2013 வெள்ளி மாலை 7:15 மணி முதல் இரவு 9:00 மணி வரை மண்டல செயலாளர் மற்றும் த'அவா குழு பொறுப்பாளர் மௌலவி, முஹம்மத் அலீ, M.I.Sc., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துவக்கமாக "ஃபிப்ரவரி -2013 மாத வியாழன்&வெள்ளி பயான் பட்டியல் மற்றும் சிறார்கள் தர்பியா பட்டியல்" வெளியிடப்பட்டது. 

பின்பு, 'கத்தர் நாட்டில் விஸ்வரூபம் திரைப்படம் நம் முயற்சியால் தடை செய்யப்பட்டது, அல் -நஜாஹ் கிளை சொற்பொழிவு முன்னேற்றம், த'அவாவை விரிவுபடுத்துவது, த'அவா குழு உறுப்பினர்களின் பங்களிப்பு, நேரம் தவறாமை, பேசும் தலைப்புகளை தேர்ந்தெடுத்தல், ஆன்லைன் நிகழ்ச்சி, இருமாதத்திற்கொருமுறை இனிய மார்க்கம்' போன்ற பல விஷயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டு,முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!