ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

21-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 21-02-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:15 மணி வரை பொருளாளர் சகோதரர். முஹம்மத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் "குர்'ஆன் - ஓர் வாழும் அற்புதம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "நாட்டு நடப்பும் - நமது மார்க்கமும்" என்ற தொடர் தலைப்பில் கேள்வி- பதில் முறையில் நிகழ்ச்சி நடத்தினார்கள்.

இறுதியாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் தமீம்,M.I.Sc.,அவர்கள் "மூடநம்பிக்கைகளை மூடுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு , மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து, இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.