ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

22-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு"

அல்லாஹுவின் அருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் , பெண்களுக்கு பெண்களே நடத்தும் மாதாந்திர "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி", 22-02-2013 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை சகோதரி.கதீஜத்துல் நூரிய்யா அவர்கள் தலமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக,சகோதரி.வஜியத் நிஷா அவர்கள் 'சிறிய செயல்கள் - பெரிய நன்மைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, சகோதரி.அஷ்ரஃப் நிஷா அவர்கள் 'தூய்மை' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

குறிப்பு: இன்ஷா அல்லாஹ்,வரும் மார்ச் மாதம் "ஆறு நூல்களிலும் இடம் பெற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்" என்ற நூலில் இருந்து 'அறிவுப்போட்டி' நடைபெறும்.