ஞாயிறு, 17 மார்ச், 2013

14-03-2013 கத்தர் மண்டல மர்கஸில் 'வாராந்திர சொற்பொழிவு'அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் 'வாராந்திர சொற்பொழிவு' நிகழ்ச்சி 14-03-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் 'மறுமைக்கு தயாராகுவோம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் 'நாட்டு நடப்பும் - நமது மார்க்கமும்' என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் 'வாழ்க்கை நெறியாக வான்மறை குர்'ஆன்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்து, தமிழகம் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் என்ற ஊரைச்சார்ந்த சகோதரர்.சண்முகவேல் அவர்களுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்காக, மண்டலம் சார்பாக 'திருக்குர்'ஆன் தமிழாக்கம், திருமறையின் தோற்றுவாய் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம்' ஆகிய புத்தகங்களை மண்டல துணைச் செயலாளரும் இஸ்லாமிய அழைப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளருமாகிய சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் இலவசமாக வழங்கினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து, இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.