சனி, 30 மார்ச், 2013

கத்தர் மண்டல மர்கஸில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 28-03-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 28-03-2013 வியாழன் இரவு 9.00 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.

இதில் மவ்லவி, மனாஸ் பயானி அவர்கள் சகோதர, சகோதரிகள் கேட்ட மார்க்க சந்தேகங்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நபி மொழி ஆதாரங்களின் அடிப்படையில் பதில் அளித்தார்கள் .

பின்பு, மண்டல தலைவர், சகோதரர் மஸ்வூத் அவர்கள் கடந்த 22-03-2013 அன்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்து அறிவிப்புகள் பல செய்தார்கள். பின்னர் மண்டல செயலாளர் சகோதரர் முஹமத் அலி Misc அவர்கள் கடந்த வாரம் பயானில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.