சனி, 13 ஏப்ரல், 2013

கத்தர் சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 11-04-2013

அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம் ,சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 11-04-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் மவ்லவி பர்லின் MISc அவர்கள் "அற்பமான உலகமும் அழியா மறுமையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதனை தொடர்ந்து கத்தர் மண்டல தலைவர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வரும் நற்பணிகள் பற்றியும், கூட்டாக ஜமாஅத்தின் கீழ் செயல் படும் போது ஏற்படும் நன்மைகள் பற்றியும், கொள்கை சகோதரர்களை ஒருங்கிணைத்தல் பற்றியும் எடுத்துக்கூறினார் . 

பின்னர் மண்டல செயலாளர் மவ்லவி முஹம்மத் அலி MISc அவர்கள் மார்க்கத்தை அறிந்து கொள்ள எளிதான வழிமுறைகள் எனென்ன என்பதை விளக்கினார். 

வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதியாக இருப்பதாலும், பரந்து விரிந்த பகுதியாக இருப்பதாலும் அல் நஜாஹ் கிளை புதிய பொறுப்பாளர்களாக சகோதரர் பாரூக், சகோதரர் ரிபாயீ, சகோதரர் நாசர் ஆகிய மூன்று சகோதரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் இந்திய இலங்கையை சகோதரர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.