ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

அல் ஃஹோர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி 18-04-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், அல் ஃஹோர் கிளையில் இரு வாரத்திற்கொருமுறை நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 18-04-2013 வியாழன் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை கிளைப் பொறுப்பாளர் சகோதரர். நைனா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில், ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி. அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "தஃப்ஸீர் கலைக்கு தம்மை அர்ப்பணித்தோர்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.