சனி, 4 மே, 2013

கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 02-05-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 02-05-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை சகோதரர் ஷேக் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர். பக்ருதீன் அலி அவர்கள் "இஸ்லாம் கூறும் மனோத்தத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

பின்னர் மவ்லவி இஸ்ஸத்தின் ரிள்வான் அவர்கள் "குர் ஆனிய சமுதாயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக மவ்லவி மனாஸ் பயானி "வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.